தமிழ் செய்திகள்  /  latest news  /  M.g.r Birthday: எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசா கமல்?

M.G.R Birthday: எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசா கமல்?

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 17, 2023 11:34 AM IST

நடிகர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல் என்று கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல் என கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல் என கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகராக இருந்த எம்ஜிஆர் 1952ம் ஆண்டு முதலே அரசியலில் மிகுந்த ஈடுபாடு உடையவராக தன்னை மக்கள் மத்தியில் முன்னிறுத்த தொடங்கினார். 1952ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜிஆர் தன்னை திமுகவில் பிணைத்துக்கொண்டு செயல்பட தொடங்கினார். நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசம் திமுகவின் முன்னேற்றத்திற்கும் உதவியது. முதலில் திமுகவின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்த எம்ஜிஆர் பின்னர் தனது திரைப்படங்களில் வசனங்கள் பாடல்கள் வாயிலாக திமுகவின் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

அவ்வப்போது திமுக முன்னெடுத்த போராட்டங்களில் தன்னை இணைத்து கொண்டு சிறை சென்றார். 1957 ஆம் ஆண்டு முதல் முறையாக திமுகவை ஆதரித்து தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக 15 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து 1958ம் ஆண்டு சென்னைக்கு பிரதமர் நேரு வருவதாக இருந்த போது கறுப்பு கொடி காட்ட திமுக முயன்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜிஆர் மற்றும் எஸ்.எஸ்ஆர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 1962ல் எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.1964ல் கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆர்க்கும் இடையே நடந்த சர்ச்சையால் திமுகவில் இருந்து வெளியேறினார். பின்னர் "காமராஜர் என் தலைவர் என் வழிகாட்டி" என எம்.ஜி.ஆர் சொன்னது அந்தைய நாட்களில் சர்ச்சைக்கு உள்ளானது. 1965ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் 1967ல் தமிழக சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினரானார். சிறுசேமிப்பு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971ல் மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து 1972ம் ஆண்டு கணக்கு விவகாராத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து அவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 1972ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார். இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு அரசியல் சூழலில் தொடர்ந்து 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் உடல் நலக்குறைவால் 1987 டிசம்பர் 24ம் தேதி காலமானார். இதையடுத்து அதிமுகவில் எம்ஜிஆரின் மனைவிக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இடையே எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த போட்டி நிகழ்ந்தது.

எம்ஜிஆர்  அரசியல் வாரிசு கமல்  என்ற போஸ்டரை பார்க்கும் சாமானியர்
எம்ஜிஆர் அரசியல் வாரிசு கமல் என்ற போஸ்டரை பார்க்கும் சாமானியர்

ஜானகி, ஜெயலலிதா இருவரும் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அ. இ. அ. தி. மு. க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி,ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார். பின்னர் ஜெயலலிதா அதிமுகவிலிருந்து 5 முறை முதல்வராக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். தமிழகத்தின் வரலாற்றில் வலிமைமிக்க அரசியல் ஆளுமையாக தன்னை முன்னிறுத்திய ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று உடல் நலக்குறைவால் அப்பலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார். பின்னர் சசிக்கலா முதல்வராக பதவி ஏற்கும் பொருட்டு ஓபிஎஸ் பதவி விலகினார். பின்னர் ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டார். ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்தார். இதையடுத்து சசிக்கலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். இதைதொடர்ந்து தற்போது வரை அதிமுகவின் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் துணிவு அரசியல் செய்த எம்ஜிஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல் என்பதாக மக்கள் நீதிமன்றம் கட்சியின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கமல் எப்போதும் எம்ஜி.ஆரின் பெயரைக் கேட்டால் உற்சாகமடைவேன். எங்கள் கட்சியின் முழக்கம் ‘நாளை நமதே’ எம்.ஜி.ஆர் படத்தின் பெயர்தான் என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியின் வாரிசாக நிரூபித்த மக்கள் நீதி மன்ற கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக நீரூபிப்பாரா என ஏற்கனவே சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது மீண்டும் எம்ஜிஆரின் அரசியல் வாரிசு கமல் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பேசு பொருளாகி உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்