தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ayali Twitter Review: ‘அசாத்திய கனவின் ஆரம்பம்’ - எப்படி இருக்கிறது அயலி?

Ayali Twitter Review: ‘அசாத்திய கனவின் ஆரம்பம்’ - எப்படி இருக்கிறது அயலி?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 26, 2023 02:10 PM IST

ஓடிடியில் கவனம் பெற்றிருக்கும் ‘அயலி’ படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே படிக்கலாம்.

அயலி விமர்சனம்
அயலி விமர்சனம்

ட்ரெண்டிங் செய்திகள்

பெண்களை, வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று கட்டுப்பாடுடன் வாழும் கிராமத்தில், டாக்டராக வேண்டும் என்ற கனவை தமிழ் செல்வி என்ற மாணவி எப்படி சாத்தியமாக்கினாள் என்பதே இந்த சீரிஸின் கதை. இந்தப்படத்தை பற்றி ட்விட்டர் வாசிகள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

அயலி படம் குறித்து ‘கோடியில் ஒருவன்’  ‘மெட்ரோ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ கடவுளின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தும் கிராமத்தை பற்றிய கதை. பகுத்தறிவு மட்டுமே பிற்போக்குத்தனத்தை அழிக்கும் ஆயுதம் என்பதை அயலி மீண்டும்நினைவு படுத்துகிறாள். அற்புதமான நடிகர்கள் தேர்வு.இயக்குனர் & தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்” என்று பாராட்டி இருக்கிறார்.

விஜய்ஜோஷ் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “  பெண் கல்வியை பற்றி இயக்குநர் முத்துக்குமார் ‘அயலி’ சீரிஸில் எடுத்துவைத்திருக்கும் கருத்திற்கு பாராட்டுகள். இந்த மாதிரியான ஒரு படத்தை கொடுத்த படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இன்னொரு இணையதளவாசி, “ பெண் வயசுக்கு வந்த உடனே கல்யாணம் பண்ணி வச்சிடனும்னு ஊர் கட்டுப்பாடு. அதை மீறி படிக்க முயற்சிக்கும் பெண்; ஃபீல் குட் வெப் சிரீஸ். குறிப்பாக கடைசி 4 எபிசோடுகள் தரமாக இருந்தது. வசனங்கள், படத்தில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பு,  அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

ரவி வர்மா என்பவர் அயலி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ பெண்கள் கிட்சன் உள்ளையே இருக்கணும்னு இன்னும் பல பேர் நினைச்சுட்டு இருக்க காலத்துல #Ayali மாதிரி ஒரு நல்ல Webseries கொடுத்த ZEE5 Teamக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

 

மற்றொரு இணையதளவாசி, “ பொம்பளனா எல்லா வேலையும் செஞ்சு தாண்டி ஆகணும். புருஷன் வீட்டுல போய் எங்க மானத்தை வாங்கிடாத..."😑�பாலைவனத்தில் தெளிக்கப்படும் மழை போல்., பல மோசமான தொடர்களுக்கு மத்தியில்., ஒரு சிறப்பான தொடர்”என்று பதிவிட்டு இருக்கிறார்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்