தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கார்த்தியை தூக்க பக்கா ஸ்கெட்ச்! - பல்பு வாங்கிய அருண், ஆனந்த்! - காதல் மோகத்தில் கார்த்திக்!

Karthigai deepam: கார்த்தியை தூக்க பக்கா ஸ்கெட்ச்! - பல்பு வாங்கிய அருண், ஆனந்த்! - காதல் மோகத்தில் கார்த்திக்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 25, 2024 02:25 PM IST

கார்த்திக் அடிபட்ட தொழிலாளருக்கு உதவி செய்ததை வைத்து, அவன் வேலையே செய்ய வில்லை என்று சொல்லி, அவனை வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்ப பிளான் போடுகின்றனர் அருணும் ஆனந்தும்.

கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கம்பெனியில் தொழிலாளி ஒருவருக்கு அடிபட்டு விட, கார்த்திக் அவருக்கு உதவி செய்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் அடிபட்ட தொழிலாளருக்கு உதவி செய்ததை வைத்து, அவன் வேலையே செய்ய வில்லை என்று சொல்லி, அவனை வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்ப பிளான் போடுகின்றனர் அருணும் ஆனந்தும். 

பிறகு இந்த விஷயத்தை தொழிலாளர்களிடம் சொல்ல, அதற்கு அனைவரும் மறுப்பு தெரிகின்றனர். மேலும் அவர்கள், கார்த்திக் தம்பி..எங்களுக்கு நல்லது தான் பண்ணாரு, அடி பட்டவருக்கு உதவியது தப்பா? என்று கேட்டனர். ஆனாலும் கார்த்தியை வேலையில் இருந்து தூக்குவது உறுதி என்றனர் அருணும், ஆனந்தும். 

இதையடுத்து தொழிலாளர்கள், கார்த்திக் தம்பியை வேலையில் இருந்து எடுத்தால், எங்களையும் வேலையில் இருந்து தூக்கி, வீட்டிற்கு அனுப்புங்க என்று அதிர்ச்சி கொடுத்தனர். பிரச்சினை வேறு மாதிரி சென்று விட்டதால், அருண் ஆனந்தும் எதுவும் செய்ய முடியாமல் தங்களது முடிவை கை விடுகின்றனர்.

அடுத்து கார்த்திக் டயர்டாக வீட்டிற்கு வர, தீபா வேலை எப்படி போச்சு என்று கேட்டு கை, கால் பிடித்து விடவா? தலையை பிடித்து விடவா என்று கேட்டாள். அதற்கு கார்த்திக் வேண்டாம் என்று மறுக்கிறான். 

இதனால் வேலை செய்து களைப்பில் வந்த புருஷனுக்கு எதுவும் செய்ய முடியலையே என்று தீபா வருத்தமாக வெளியே கிளம்ப, கார்த்திக் கையை பிடித்து இழுத்து காதல் பார்வையுடன் பார்க்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

கார்த்திக் தொழிலாளர்களுக்கு நல்ல சாப்பாடை போட வைத்த நிலையில்,  தொழிலாளர்கள் எல்லாரும் அவரை கொண்டாடி மகிழ்ந்தனர். அடுத்ததாக வேலை முடிந்து அருண் மற்றும் ஆனந்த் வீட்டிற்கு வர, இன்னைக்கு எப்படி போச்சு என்று ரியா கேட்டாள். 

அதற்கு அவன், அந்த கார்த்திக்கை நம்மளால தோற்கடிக்க முடியாது போல, எல்லாரும் அவனை கொண்டாடுறாங்க என்று சொன்னான். 

பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர, அபிராமி அவனை வரவேற்று சாப்பிட கூப்பிட்டாள் ; இதையடுத்து, ஐஸ்வர்யா அவர் தான் இந்த சொத்து உரிமை கொண்டாட மாட்டேன்னு சொன்னாரு, அவரை டைனிங் டேபிளில் உட்கார வைத்து சாப்பாடு கொடுக்கறீங்க என்ன இதெல்லாம்… என்று கேட்டாள். 

இதனைக்கேட்டு கடுப்பாகும் அபிராமி, ஆயிரம் தான் பிரச்சினை நடந்தாலும், அதை எல்லாம் தாண்டி அவன் என்னுடைய பிள்ளை, அவனுக்கு நான் சாப்பாடு சமைத்து கொடுப்பேன், அதை தடுக்கிற உரிமை உனக்கு மட்டுமில்ல; யாருக்குமே கிடையாது என்று சொன்னாள். 

அடுத்து கார்த்திக் சாப்பிட்டு முடித்து விட்டு, ரூமுக்கு சென்று வேலை செய்த அசதியில் அசந்து தூங்கினான். இதையடுத்து, தீபா அவனுக்கு கால் அமுக்கி விட்டாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்