Samyuktha: முகத்தில் காயம்! விபத்தில் சிக்கிய கட்சி சேர பாடல் சம்யுக்தா - இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு
யூடியூப்பில் பிரபலமான கட்சி சேர பாடல் மூலம் புகழ் பெற்ற சம்யுக்தா விபத்தில் சிக்கிய நிலையில் அதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப்பில் வெளியான கட்சி சேர என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. சமூக வலைத்தள வைரலான இந்த பாடலை வைத்து எங்கு பார்த்தாலும் ரீல்ஸ் விடியோக்களும், ஷார்ட் ஸ்டோரிகளும் பகிரப்பட்டன.
இந்த பாடலில் நடனமாடிய சம்யுக்தா விஸ்வநாதன் நடனம் அனைத்து வயதினராலும் ரசிக்கப்பட்டது. கட்சி சேர பாடலுக்கு பிரபல பின்னணி பாடகர்களான திப்பு, ஹரிணி தம்பதிகளின் மகன் சாய் அபயங்கர் இசையமைத்திருப்பார்.
சம்யுக்தாவுக்கு விபத்து
இந்த பாடலில் தனது நடன அசைவுகளால் கவர்ந்த சம்யுக்தா விபத்தில் சிக்கியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூக்கு, தாடை பகுதியில் சிறிய பிளாஸ்ட்ர் ஒட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விபத்தில் சிக்கியது தொடர்பாக தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் சம்யுக்தா, மருத்துவமனையில் இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
