தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Diwali In Theatre: என்னடா பண்றீங்க.. தியேட்டரில் பட்டாசு வெடித்த அலப்பறை செய்த புள்ளிங்கோ

Diwali In Theatre: என்னடா பண்றீங்க.. தியேட்டரில் பட்டாசு வெடித்த அலப்பறை செய்த புள்ளிங்கோ

Aarthi V HT Tamil
Nov 13, 2023 12:26 PM IST

தீபாவளி பண்டிகையையொட்டி இளைஞர்கள் திரையரங்கத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

தியேட்டரில் பட்டாசு
தியேட்டரில் பட்டாசு

ட்ரெண்டிங் செய்திகள்

உச்சநீதிமன்ற உத்தரவின்ப டி நாடு முழுவதும் பட்டாசுகளை வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் விதித்துள்ளன.

குறிப்பாக பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு இதில் முக்கியமானதாக உள்ளது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை காற்று மாசுக்கு காரணமாக அமைவதால் தமிழ் நாட்டில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மாநில வாரியாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருந்தது.

தீபாவளி பண்டிகை நடந்து முடிந்த நிலையில் வித்தியாசமான சேட்டைகள் செய்து பட்டாசு வெடித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றன.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிரபல நடிகரின் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் சென்று பார்த்து உள்ளனர். அப்போது தீபாவளி சமயம் என்பதால் ரசிகர்கள் ஆர்வத்தில் திரையரங்கிற்குள் பட்டாசுகளை வெடித்து ரகளை செய்து உள்ளனர்.

மக்கள் மேல் பட்டாசு விழும், பொருட்கள் சேதாரம் என எதையும் கண்டு கொள்ளலாம் இது போன்ற செயலகளில் ஈடுபட்ட சம்பம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

மேலும் இது போன்ற இளைஞர்கள் மேல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இதே போல், பேண்ட் ஜிப்பிற்குள் புஸ்வானத்தை வைத்து கொளுத்தி தீபாவளி கொண்டாடும் இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் பேசுப்பொருள் ஆகி உள்ளது. 

பைக் ரேஸ் செய்து அட்ராசிட்டி செய்து கொண்டிருந்த இளைஞர்கள் தங்களது பைக்குகளில் அவுட் ரக பட்டாசுகளை கட்டி வீலிங் செய்து வானவேடிக்கை நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்