தமிழ் செய்திகள்  /  Entertainment  /  What Happened To Ajith Kumar In The Hospital

Ajith Kumar: மருத்துவமனையில் அஜித் - என்ன ஆனது?

Marimuthu M HT Tamil
Mar 07, 2024 12:03 PM IST

சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், நடிகர் அஜித்

அஜித்.
அஜித்.

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் அஜித் குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்த நிலையில், அதற்கிடையே சென்னைக்கு வந்தநிலையில் அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. 

நடிகர் அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். எச். வினோத் இயக்கிய துணிவு என்ற படத்திற்குப் பிறகு இப்படம் வருவதால், இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடாமுயற்சி ஒரு குழும நடிகர்களைக் கொண்ட ஒரு அதிரடி திரில்லர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அங்கு ரசிகர்கள் அஜித்தை ஒரு புத்தம் புதிய அவதாரத்தில் பார்க்கப் போகிறார்கள்.

இதற்கிடையில், படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளன.

அதனை சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா ஜனவரி 17 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தபோது அதே செய்திக்காக திரைப்படம் தலைப்புச் செய்திகளில் வந்தது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியது.

இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

சுபாஸ்கரன் அல்லிராஜா தனது சொந்த பேனரான லைகா புரொடக்ஷன்ஸின் கீழ் இப்படத்தைத்தயாரிக்க அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத் தொகுப்பாளராக இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு துனுஷியாவில் நடைபெற்று வந்தது. ஆனால் வானிலை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. 

இதனையடுத்து மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் மீண்டும் விடாமுயற்சி படத்தின், ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக பட அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் அப்டேட் வந்தால் போதும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அவர்களின் எதிர்பார்ப்பை விடாமுயற்சி படக்குழு பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். அதற்குள் அஜித்தும் உடல்நலம் தேறிவிடுவார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்