சாரி பிக்பாஸ் சாரி.. கடைசியில இப்படி ஆகிருச்சே.. விளையாட்டு விபரீதத்தில் முடிந்து விட்டதே..கேமரா முன் புலம்பும் ரஞ்சித்!
Bigg Boss Tamil 8 : ரவீந்தர் ரஞ்சித் இருவரும் நேற்று பிளான் பண்ணி செய்த பிராங்க் தற்போது விபரீதத்தில் முடிந்துள்ளது.இந்த சம்பவத்திற்கு ரஞ்சித் வருத்தம் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 மூன்று தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்த வழங்குகிறார். மூன்று தினங்களுக்கு முன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த முறை உள்ளே போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் எனத் தனி தனியாக பிரிக்கபட்டனர். அவர்கள் இருவருக்கும் தனித் தனியாக டாஸ்க் வழங்கப்படுகிறது.
ரவீந்தர்-ரஞ்சித் பிராங்க்
ரவீந்தர் ரஞ்சித் இருவரும் நேற்று பிளான் பண்ணி செய்த பிராங்க் தற்போது விபரீதத்தில் முடிந்துள்ளது. இவர்கள் செய்த பிராங்க் வீட்டில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் குறிப்பாக இதில் பெண்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். முக்கியமாக ஜாக்குலின் இதில் எமோஷனல் ஆகி அழுதுள்ளார்.
ரஞ்சித் வருத்தம்
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ரஞ்சித் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரஞ்சித் பேசுகையில், “இவ்வளவும் பண்ணி ஒரு விஷயம் என்று வரும்போது அவங்க மனது ரொம்ப பகைச்சிருக்கும் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவங்க எல்லாம் பீல் பண்ணுவாங்க அவங்க மனசுக்குள்ள என்ன நினைப்பாங்க இரவு தூங்கும் போது அவங்க மனதில் என்னைப் பற்றி என்ன மதிப்பீடு இருக்கும் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.