விஜய் சேதுபதியின் கவுரவம் கூடுகிறது! பார்த்திபன் நெகிழ்ச்சி பதிவு!
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 இன் தொடக்க விழாவில் புதிதாக தொகுப்பாளராக வந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி பார்த்திபன் எழுதிய கவிதை ஒன்றினை நினைவு கூர்ந்து எடுத்துக் காட்டி பேசினார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 இன் தொடக்க விழாவில் புதிதாக தொகுப்பாளராக வந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி பார்த்திபன் எழுதிய கவிதை ஒன்றினை நினைவு கூர்ந்து எடுத்துக் காட்டி பேசினார்.இயக்குநரும், நடிகருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவரது X தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் செயல் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி
எந்தக் கதையாக இருந்தாலும் அதனை தன் பாணியில் நடித்து அசத்துவதில் விஜய் சேதுபதி வல்லவர். தமிழ் அல்லாது தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பான் இந்தியா நட்சத்திரமாக ஜொலித்து வரும் விஜய் சேதுபதி ஹீரோ ரோலில் மட்டும் நடிப்பதில்லை. வில்லன், கேமியோ என எந்த ரோல் கொடுத்தாலும் அதக்களம் செய்து விடுவார். மேலும் இவரது அசாத்திய நடிப்புத் திறன் காரணமாகவே பல மொழி திரை ரசிகர்களும் இவரின் மாபெரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
குறிப்பாக விஜய் சேதுபதி ரசிகர்கள் சிலர் இனி ஹீரோ ரோலில் மட்டும் நடிக்குமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார். இவர் கடைசியாக மகாராஜா படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். மேலும் இப்படம் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளிக் குவித்தது. தற்போது விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 8 இன் தொகுப்பாளராக மாறி உள்ளார். இதுவரை இந்நிகழ்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசன் இருந்து வந்த நிலையில் இந்த சீசன் இவர் வந்துள்ளார். இவர் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிறப்பார்க்கப்பட்டு வருகிறது.