பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா?ரவுண்ட் கட்டப்படும் ரவீந்தர்! ஒட்டு கம்மியாகிருச்சே!
தமிழ் பிக்பாஸ் சீசன் 8 இன் முதல் வாரத்தில் குறைவான ஓட்டுகள் பெற்ற போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் மற்ற 7 சீசன்களையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என புதிய தொகுப்பாளர் முதல் புதிய விதிமுறைகள், புதிய வீடு என அனைத்திலும் புதிய நடவடிக்கைகளை இந்த சீசன் பிக்பாஸ் கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த சீசன் தொடங்கிய போது மொத்தம் 18 போட்டியாளர்களோடு தொடங்கியது.
மேலும் இதில் வேறு சில போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள் எனப் பேசப்பட்டு வந்தது. இருப்பினும் அவர்கள் இதில் கலந்து கொள்ளாதது பார்வையாளர்களுக்கு சற்று ஏமாற்றம் அளித்து இருந்தாலும், இப்போது உள்ள போட்டியாளர்களே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
ஒரே நாளில் எலிமினேஷன்
இந்த சீசன் முழுக்க முழுக்க சுவாரசியமாக ஆரம்பிக்கப்பட்டு, சுவரசியாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களை விமர்சித்து வந்த ரவீந்தர் உள்ளே வந்துள்ளார். மேலும் சர்ச்சையில் சிக்கிய அர்ணவ், அர்ஷிதா ஜோடி, விஜய் டிவி பிரபலங்களான பவித்ரா, ஜாக்குலின், தீபக், சுனிதா உட்பட பலர் வந்துள்ளார். களைக்கட்டிய பிக்பாஸில் முதல் நாளே சாச்சனா வெளியேற்றப்பட்டார். இது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மீண்டும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார்.