விஜய் மாஸ் ஹீரோவாக உருவான நாள்..அஜித்தின் அட்டர் பிளாப்! தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்ட்
விஜய் மாஸ் ஹீரோவாக உருவான நாள், அஜித்தின் அட்டர் பிளாப் படம், பாலா இயக்கத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படம் என தமிழில் இன்று வெளியான படங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமா ரிலீஸ்களில் இன்றைய நாள் முக்கியாமான நாளாக இருந்துள்ளது. தளபதி விஜய் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்த நாளாக உள்ளது. விஜய் பஞ்ச் வசனம் பேசி, தனக்கென தனியொரு ஸ்டைல், லுக்குடன் தோன்றிபக்கா மாஸ் ஹீரோவாக மாறிய திருமலை படம் இன்றுதான் வெளியாகியுள்ளது. அக்டோபர் 24ஆம் தேதியான இன்று தமிழில் வெளியான படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
உத்தமபுத்திரன்
உத்தமபுத்திரன் என்றாலே பலருக்கு நினைவுக்கு வரும் படமாக தனுஷ், ஜெனிலியா, விவேக் நடித்த பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் தான் உள்ளது. ஆனால் பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலேயே உத்தமபுத்திரன் என்ற பெயரில் வரலாற்று படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. நிற்க, சிவாஜி கணேசன் நடிப்பதற்கு முன்னரே அதே உத்தமபுத்திரன் என்ற டைட்டிலுடன் சிவாஜி நடித்த படத்தின் கதையில், பி.யு. சின்னப்பா, எம்.வி. ராஜம்மா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம, டி.எஸ். பாலையா உள்பட பலர் நடித்து 1940இல் உத்தமபுத்திரன் ஒரிஜினல் வெர்ஷன் வெளியானது. அந்த டைட்டிலுடன் வெளியான முதல் படத்தை டி. ஆர். சுந்தரம் இயக்கியுள்ளார்.
தமிழில் ஹீரோ இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது இந்த படம். அத்துடன் ஹீரோவாக இரட்டை வேடங்களில் நடித்த முதல் நடிகர் என பெயரையும் பி.யு. சின்னப்பா பெற்றார்.
சுமார் 3.40 மணி நேரத்துக்கு மேலாக ஓடக்கூடிய வகையில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. தமிழில் சிறந்த கிளாசிக் படமாக இருந்து வரும் உத்தமபுத்திரன் வெளியாகி இன்றுடன் 84 ஆண்டுகள் ஆகிறது
திருமலை
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உருவெடுத்த நடிகர் விஜய் நடத்திய பாய்ச்சலாக திருமலை படம் உள்ளது. அதுவரை ரெமாண்டிக் ஹீரோவாக இருந்த விஜய், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார். பக்கா மாஸ் மசாலா படமாக
2003 தீபாவளி வெளியீடாக வந்த திருமலை படத்தை ரமணா இயக்கியிருந்தார். பஞ்ச வசனங்கள், தனக்கென தனியொரு ஸ்டைல் மற்றும் மீசையை பாதி ட்ரிம் செய்த லுக் என விஜய் தோன்றிய இந்த படம் அவரை வசூல் மன்னனாகவும் மாற்றியது. இந்த படத்தில் திருமலை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விஜய் ஓட்டிய பைக் ட்ரெண்டானது.
திருமலை படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் வில்லனாக நடித்திருப்பார். விவேக், ரகுவரன், கெளசல்யா உள்பட பலரும் நடித்திருப்பார்கள். தீபாவளி ரேஸில் வெற்றி பெற்ற இந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடியதுடன் நல்ல வசூலையும் குவித்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் விஜய் மாஸ் ஹீரோ ஆவதற்கான ஆரம்ப புள்ளி தொடங்கப்பட்ட திருமலை வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது.
ஆஞ்சநேயா
விஜய்யின் திருமலையுடன் மோதலாக அஜித்தின் ஆஞ்சநேயா தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது. வல்லரசு படத்தை இயக்கிய என். மகாராஜன் இயக்கியிருந்த இந்த படத்தில் அஜித் ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருப்பார். ரகுவரன், ஜெய பிரகாஷ் ரெட்டி, பெப்சி விஜயன், அனுஹாசன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் அஜித்குமார் முதல் முறையாக போலீஸ் ஆபிசராக நடித்திருப்பார்.
உப்பு சப்பில்லாத திரைக்கதையால் ரசிகர்களை கவராமல் போன இந்த படம் அட்டர் பிளாப் ஆனது. தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது. அஜித் ரசிகர்கள் மறக்க கூடிய படங்களில் லிஸ்டில் வைத்திருக்கும் ஆஞ்சநேயா வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிறது
பிதாமகன்
இயக்குநர் பாலா படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்ட படம் பிதாமகன். விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, மனோபாலா, கருணாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படம் தீபாவளி நாளில் வெளியானது. எழுத்தாளர் ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஒரு ஆண்டி சிறுகதையை அடிப்படையாக கொண்டு பிதாமகன் படத்தை உருவாக்கினார் இயக்குநர் பாலா.
தமிழ் சினிமாவில் ஹீரோ ஒருவர் சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் வெட்டியான் வேடத்தில் நடித்த படமாக இது அமைந்திருந்தது. அந்த கதாபாத்திரத்தில் டயலாக் எதுவும் பேசாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. படத்தில் மற்ற நடிகர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றனர். இளையராஜா இசையில் இளங்காத்து வீசுதே பாடல் இன்றளவும் கேட்டு ரசிக்ககூடிய கிளாசிக்கான பாடலாக மாறியுள்ளது.
ஒற்றன்
ஸ்பை த்ரில்லர் படமாக இளங்கண்ணன் இயக்கத்தில் தீபாவளி ரிலீசாக வந்து ஹிட்டான படம் ஒற்றன். அர்ஜுன், சிம்ரன், வடிவேலு, சரத்பாபு, மனோரமா, அம்பிகா உள்பட பலரும் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். பிரவீன் மணி இசையில் சின்ன வீடா வரட்டுமா என்ற பாடல் அப்போது ட்ரெண்டிங் பாடலாக மாறியது. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த ஒற்றன் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகியுள்ளது.