விஜய் - அஜித் போட்டி உருவாக சினிமா காரணமா? நடிகை காரணமா?: வெளியான பகீர் தகவல்!
விஜய் - அஜித் போட்டி உருவாக சினிமா காரணமா? நடிகை காரணமா? என்பது குறித்து வெளியான பகீர் தகவல் குறித்துப் பார்ப்போம்.
விஜய் - அஜித் போட்டி உருவாக சினிமா காரணமா? நடிகை காரணமா? என்பது குறித்து திரைக்கூத்து யூட்யூப் சேனலில் வெளியான வீடியோ வைரல் ஆகியுள்ளது.
இதுதொடர்பாக திரைக்கூத்து யூட்யூப் சேனலில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ‘’ஆரம்ப கட்டத்தில் விஜய் நடிக்க முயற்சிக்கையில் அவர் அப்பாவிடம் ரஜினி பட வசனங்களைப் பேசிக்காட்டி நடித்திருக்கிறார். பின் நாளைய தீர்ப்புன்னு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அந்த முதல் படம் பெரிய ஃபிளாப் ஆகுது. அப்போது அவர் அப்பாவிடம் பெல்ட்டில் அடிவாங்குகிறார், நடிகர் விஜய்.
அப்போது ஒரு வாரப் பத்திரிகையில் டைரக்டர் மகன் என்றால் ஹீரோவாகிடணுமா, இவன் மூஞ்சியை எல்லாம் காசுகொடுத்து பார்க்கணுமா என்று எழுதியிருக்காங்க. இதைப் படிச்ச எஸ்.ஏ.சந்திரசேகர், எமோஷனலில் தான், நடிகர் விஜய்க்கு பெல்ட் அடி கொடுக்கிறார்.
அடுத்து சாலிகிராமம் வீட்டை அடமானம் வைச்சு, தன் பையன் விஜயை வைச்சு படம் எடுக்கப்போகிறார், எஸ்.ஏ.சந்திர சேகர். அப்போது ஒரு பெரிய நடிகரின் படத்தில் விஜய் நடித்தால் தேறிடுவார் என்று சத்யராஜை அப்ரோச் பண்றாங்க. அப்போது தொடர்ச்சியாக ஒரு 28 நாட்கள் போய், எஸ்.ஏ.சி. சத்யராஜை போய் பார்த்துட்டு கால்ஷீட் கேட்டுட்டு கேட்டுட்டு வர்றார். இந்த மாதிரி நடக்கும்போது ரொம்ப மன விரக்தியோடு இருந்திருக்கார், எஸ்.ஏ.சந்திரசேகர்.
விஜயை புறக்கணித்த சத்யராஜ் - வரவேற்ற விஜயகாந்த்:
நான் சிகப்பு மனிதன் படத்தில் சத்யராஜை மெயின் வில்லனாக நடிக்கவைச்சது, எஸ்.ஏ.சந்திரசேகர் தான். ஒரு கட்டத்தில் புரிஞ்சுக்கிட்டார். அப்போது குடும்பமே சோகத்தில் இருக்கு. அந்த தருணத்தில் விஜயகாந்த் மனசுக்கு வந்து, ஷோபா விஜயகாந்துக்கு போன் அடிச்சு பேசுறாங்க. அப்போது சாரை பேசச் சொல்லுங்கன்னு விஜயகாந்த் சொல்றார். அப்படி இருக்கும்போது, எஸ்.ஏ.சி தன் குடும்பச் சூழ்நிலையை விஜயகாந்திடம் சொல்கிறார். அரைமணிநேரத்தில் விஜயகாந்த் அவர் வீட்டுக்கு வந்து, நடிக்க சம்மதம் சொல்லி நடிச்ச படம் தான், செந்தூரப் பாண்டி. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகுது.
அடுத்து சங்கவி - விஜய் காம்பினேஷனில் நிறையப் படங்கள் வருது. ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகியப் படங்களில் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்குறாங்க. ஆவரேஜாகப் படம் ஓடுது. அப்போது சங்கவி கூட விஜய் நெருக்கமாகுறாங்க. இரண்டு பேரும் லவ் பண்றாங்க. அப்போது நிறைய நாட்கள் சங்கவி வீட்டிலேயே விஜய் தங்கிவிடுகிறார். ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சி விசாரிக்கிறார். அப்போது விஷயம் தெரியுது. அப்படி இருக்கும்போது, எஸ்.ஏ.சி சங்கவி வீட்டுக்கே போய், விஜயை பிளாக் பண்ணுறார்.
நடிகையால் இரு நடிகர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்:
அப்போது எஸ்.ஏ.சி, ‘உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கேன். நீ இந்த மாதிரி வேலைக்கு வந்திட்டீயே. சினிமாவில் இதெல்லாம் அதிகமாக இருக்கும். நீ இதெல்லாம் கடந்து வந்தால் தான் ஒரு இடத்தைப் பிடிக்க முடியும். இப்படி நடிகையோட கிசுகிசுவில் மாட்டினால் மார்க்கெட் போய்டும். சேரவேண்டிய இடத்தை சேரமுடியாது’ அப்படின்னு சொல்லியிருக்கார். இதைக்கேட்டு விஜய் மனம்மாறி வீட்டுக்கு வந்துவிடுகிறார்.
ஆனால், எஸ்.ஏ.சி-க்கு தெரியாமல் சங்கவி- விஜய் டேட்டிங் நடந்துட்டு தான் இருக்கு. ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சி சங்கவியைக் கூப்பிட்டு சொல்றார். சினிமாவில் நீ ஒரு இடத்தைப் பிடிக்க நினைத்தாலும் இப்படி இருந்தால் ஜெயிக்கமுடியாது அப்படி சொல்கிறார். அப்போது சங்கவியின் டிராக் மாறுது. அடுத்து அவங்க அஜித் பக்கம் போறாங்க. ஏனென்றால், அஜித்தின் முதல் பட ஹீரோயின் சங்கவி. இதில் விஜய்க்கும் அஜித்துக்கும் பிரச்னைகள் ஆரம்பிச்சிருக்கு. சங்கவி முதலில் விஜயை லவ் செய்தாங்க. விஜய் லவ் டிராப் ஆனதும், அஜித் கூட பழக ஆரம்பிச்சாங்க. அடுத்து காதல் கோட்டை படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த ஹீராவுக்கும் அஜித்துக்கும் ஒரு வேவ் லெங்க்த் செட் ஆகுது. அப்போது, சங்கவியை முழுசாக விட்டுட்டார், அஜித்'' எனச் சொல்லி முடித்தார்.
நன்றி: திரைக்கூத்து
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
டாபிக்ஸ்