Director Bala: ‘தண்ணீராய் கரைந்த பணம்; துரோக முகத்தை காட்டிய பாலா; நொந்த தயாரிப்பாளர்! - பிதாமகன் படத்தில் நடந்தது என்ன?
அண்மையில் காலமான பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு பாலா செய்த துரோகம் குறித்து, பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “அந்த சமயத்தில், சின்ன சின்ன பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வந்தார் வி.ஏ.துரை. இதனிடையேதான் அவர் இயக்குநர் பாலாவின் திரைப்படங்களை பார்க்கிறார். இந்த இயக்குநர் வித்தியாசமாக படம் எடுக்கிறாரே என்று அவரை அழைத்து, தனக்கு படம் ஒன்றை இயக்கி தருமாறு கமிட் செய்கிறார். அந்தத்திரைப்படம்தான் ‘பிதாமகன்’.
வி.ஏ.துரைக்கு பாலாவை கமிட் செய்த பின்னர்தான், அவரைப்பற்றி தெரிந்தது. படப்பிடிப்பில், தினமும் காசை தண்ணீராக செலவழிக்க வைத்தார் பாலா. புலி வாலை பிடித்த கதை போல, துரையின் நிலைமை மாறிவிட்டது.
பாலாவின் குணம் பற்றி சினிமாத்துறைக்கே தெரியும். படப்பிடிப்பில் பாலாவுக்கும், இவருக்கும் ஏகப்பட்ட சண்டைகள் நடந்தன. அது போன்ற தருணங்களிலெல்லாம் பொறுமையாக இருந்து, எப்படியாவது படத்தை முடித்து விட வேண்டும் என்று பொறுமையாக இருந்தார் வி.ஏ. துரை. இறுதியில் அந்தப்படத்தை ஒரு வழியாக முடித்தார்.
கடைசியில் போட்ட பட்ஜெட்டைத் தாண்டி, படத்திற்கு பெரிய செல்வாகி விட்டது. இருப்பினும், இப்போதாவது படம் முடிந்ததே என்று பெருமூச்சு விட்டார். ஆனால் இறுதியாக படத்தை பாலா காண்பித்த போது, துரைக்கு படத்தின் மீது பெரும் நம்பிக்கை வந்து விட்டது. காரணம், படம் அந்தளவுக்கு மிகவும் நன்றாக இருந்தது.
படத்தை பார்த்த பிரமிப்பில் இருந்த துரை, பாலா வேறு எந்த தயாரிப்பாளரிடமாவது சென்று விட போகிறார் என்று நினைத்து அப்போதே அவரிடம் ஒரு குறிப்பிடத்தொகையை அட்வான்ஸாக கொடுத்து அடுத்தப்படத்தையும் தனக்கே செய்யுபடி கமிட் செய்திருக்கிறார்.
பாலாவும் அதனை வாங்கிகொண்டு ஓகே என்று சொல்லி இருக்கிறார். பிதாமகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் நடித்த விக்ரம், சூர்யா உள்ளிட்ட எல்லோருக்கும் பெரிய பெயர் கிடைத்தது.
இயக்குநரையும் கோலிவுட் கொண்டாடியது. ஆனால் படத்தின் கலெக்ஷன் செலவு செய்த தொகையை எடுத்ததா? என்றால் அது கேள்விக்குறிதான். அதன் பின்னர் துரை எடுத்த படங்கள் தோல்வி படங்களாக மாற, பாலாவை ஏற்கனவே கமிட் செய்த படம் குறித்து கேட்க போனார். பாலாவிடம் இருந்து அதற்கு பதிலே இல்லையாம். அதனைத்தொடர்ந்துதான் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என துரைக்கு புரிந்து இருக்கிறது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்