தமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஷன் குயின், நடிப்பு ராட்சசி..ரசிகர்கள் நெஞ்சில் குடியிருக்கும் நடிகை ஜோதிகா பிறந்தநாள்
தமிழ் சினிமாவின் எக்ஸ்பிரஷன் குயின், நடிப்பு ராட்சசி என கொண்டாடப்படும் நடிகையாக இருப்பவர் ஜோதிகா. தனது அபார நடிப்பால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் நெஞ்சில் குடியிருக்கும் நடிகை ஆக திகழும் ஜோதிகாவுக்கு இன்று பிறந்தாள்.
தமிழ் சினிமாவில் தனது பெயரை யாராலும் மறக்க முடியாத அளவில் தனது அற்புத நடிப்பாலும், கதாபாத்திரங்களாலும் பல்வேறு சம்பவங்களை நிகழ்த்திய மந்திரகாரியாக இருந்து வருபவர் நடிகை ஜோதிகா. பிறந்தது மும்பையில் இருந்தாலும், தமிழ்நாட்டு மருமகள் ஆகியிருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் குடிபுகுந்த நடிகையாக திகழ்கிறார்.
சினிமா பயணம்
ஜோதிகாவின் குடும்பம் கலை குடும்பமாகவே இருந்துள்ளது. அவரது தந்தை சினிமா தயாரிப்பாளாராகவும், சகோதரி நக்மா நடிகையாகவும் இருந்துள்ளார். அதேபோல் சகோதரர் சூரஜ், இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்துள்ளார்.
சைக்காலஜி படித்த ஜோதிகா சினிமா மீதான ஆர்வத்தால் நடிக்க வந்தார். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான டோலி சாஜா கே ரக்னா தான் ஜோதிகாவின் முதல் படம். படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தமிழில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வாலி படத்தில் சிறப்பு கேமியோ வேடத்தில் நடித்திருப்பார்.
முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை வென்றார். இந்தியில் நடித்த முதல் படத்துக்கும் சிறந்த அறிமுக நடிகையாக பிலிம் பேர் விருதுக்கு நாமிணேட் ஆன போதிலும் அப்போது விட்ட விருதை தமிழில் தட்டிச்சென்றார்
சூர்யாவுடன் காதல்
வளர்ந்து வரும் நடிகராக இருந்த சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார்கள். அப்போது ஜோதிகாவுக்கு தமிழ் சொல்லி கொடுக்கும் சூர்யாவின் அழகிலும், ஜோதிகாவின் தமிழ் ஆர்வத்தை பார்த்து வியந்து சூர்யாவும் மனதை பரிமாறிக்கொண்டுள்ளனர். 2001 முதல் டேட்டிங்கில் இருந்த இருவரும் 2006இல் திருமணம் செய்து கொண்டனர். கோலிவுட் திரையுலகின் பேவரிட் நட்சத்திர தம்பதிகளாகினர்.
திருமணத்துக்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கிய ஜோதிகா குடும்பத்தை கவனித்து கொண்டார். சூர்யா - ஜோதிகா தம்பிதியினருக்கு தியா, தேவ் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
எக்ஸ்பிரஷன் குயின், நடிப்பு ராட்சசி
சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் மற்ற நடிகைகள் போல் கவர்ச்சிகரமான வேட்ங்களில் நடித்த போதிலும் பின்னர் நடிப்புக்கு ஸ்கோப் இருக்கு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். ஜோதிகா என்ற பெயரை சொன்னவுடனே நினைவுக்கு வரும் விதமாக தனது படங்களில் பல வேடிக்கையான எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்தியும்,ஸ துருதுருப்பான பெண்ணாகவும் தோன்றியுள்ளார்.
அந்த காலகட்டத்தில் ஜோதிகாவின் வேடிக்கையான நடிப்பு ஓவர் ஆக்டிங் என விமர்சிக்கப்பட்டாலும் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியாவின் ஹாசினி, ஹன்சிகா நடித்த பல்வேறு கதாபாத்திரங்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும், ரெபரன்ஸ் ஆகவும் இருந்தது என்றே கூறலாம்.
அதேபோல் சீரியஸான வேடங்களிலும் ஜோதிகா பட்டையை கிளப்ப தவறவில்லை. சந்திரமுகி படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரள வைத்த அவர், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வில்லியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, தூக்கி சாப்பிடும் விதமாக நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவராக இருந்த ஜோதிகாவை ரசிகர்கள் நடிப்பு ராட்சசி என்றே செல்லமாக அழைத்தார்கள். ஹீரோயினாக உச்சத்தில் இருந்தபோது தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார்.
சினிமாவுக்கு கம்பேக்
திருமணத்துக்கு பின் குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு 2015இல் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார் ஜோதிகா. என்னதான் கேப் விட்டு நடிக்க வந்தாலும் தனக்குள் இருக்கும் நடிப்பு திறமையையும், கலை தாகத்தையும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸில் கொட்டி வருகிறார். தொடர்ந்து தற்போது சினிமாக்களில் நடித்து வரும் ஜோதிகா தமிழ் தவிர மலையாளம், இந்தி மொழிகளில் கோலோச்சி வருகிறார்.
அடுத்தடுத்து இந்தி படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜோதிகா, தற்போது கணவர் சூர்யாவுடன் மும்பையிலேயே செட்டிலாகியுள்ளார். கலைத்தாய் பெற்றெடுத்த மகள்களில் ஒருவராக தனது நடிப்பு திறமை மூலம் ரசிகர்கள் நெஞ்சில் குடியிருக்கும் நடிகையான ஜோதிகாவுக்கு இன்று பிறந்தநாள்.