மலேசிய கேங்ஸ்டர்.. வெள்ளை புலியாய் நடந்து வந்த அஜித்.. பிளாக் அண்ட் வொயிட் மேஜிக் வொர்க் அவுட் ஆனது எப்படி? - அனுவர்தன்
பில்லா திரைப்படத்தில் அஜித்தின் பிளாக் அண்ட் வொயிட் கோட் சூட் மேஜிக் எப்படி வொர்க் ஆனது என்பது குறித்து அந்தப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன் குமுதம் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

மலேசிய கேங்ஸ்டர்.. வெள்ளை புலியாய் நடந்து வந்த அஜித்.. பிளாக் அண்ட் வொயிட் மேஜிக் வொர்க் அவுட் ஆனது எப்படி? - அனுவர்தன்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித்திற்கு ஒரு கட்டத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியைத்தழுவிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், அஜித்தின் மீது பிரியம் கொண்ட ரஜினிகாந்த், தான் நடித்த ‘பில்லா’ திரைப்படத்தை ரீமேக் செய்யுமாறு கூறினார்.
வேதவாக்காக எடுத்த அஜித்
குருவின் வாக்கை வேத வாக்காக எடுத்த அஜித், இயக்குநர் விஷ்ணுவர்தனை இயக்குநராக நியமித்து, அந்தப்படத்தில் நடித்தார். கடந்த 2007ம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதோடு, அஜித்தின் கெரியரில் திருப்பு முனை படமாகவும் அமைந்தது.