தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maamannan: ‘மாமன்னன்’ படத்தின் டிக்கெட் புக்கிங் ஓப்பன் ஆனது- டிக்கெட் போட்டாச்சா?

Maamannan: ‘மாமன்னன்’ படத்தின் டிக்கெட் புக்கிங் ஓப்பன் ஆனது- டிக்கெட் போட்டாச்சா?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 25, 2023 01:53 PM IST

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாமன்னன் படத்தின் டிக்கெட் புக்கிங் ஓப்பனாகி இருக்கிறது.

vadivelu udhayanidhi mariselvaraj maamannan ticket booking open
vadivelu udhayanidhi mariselvaraj maamannan ticket booking open

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இரண்டு படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. படத்தில் வடிவேலு பாடிய ‘ராசா கண்ணு’ பாடல் உட்பட அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

 

டிக்கெட் புக்கிங் ஓப்பன்!
டிக்கெட் புக்கிங் ஓப்பன்!

குறிப்பாக விழா மேடையில் கமல்ஹாசன் முன்னர் அவரின் ‘தேவர்மகன்’ திரைபடம் தன்னை எப்படி பாதித்தது என்பது குறித்து மாரி செல்வராஜ் பேசியதும் சர்ச்சையானது. அண்மையில் வெளியிடப்பட்ட மாமன்னன் படத்தின் ட்ரெய்லரும் கவனம் ஈர்த்தது. இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாக உள்ள இந்தத்திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது ஓப்பனாகி இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்