Adham bava on Director Bala: ‘9 டு 9.. கால்கடுக்க காக்க வைத்த நண்பன்; பாலா வைத்த டஃப் டெஸ்ட்!-தெறித்து ஓடிய இயக்குநர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Adham Bava On Director Bala: ‘9 டு 9.. கால்கடுக்க காக்க வைத்த நண்பன்; பாலா வைத்த டஃப் டெஸ்ட்!-தெறித்து ஓடிய இயக்குநர்!

Adham bava on Director Bala: ‘9 டு 9.. கால்கடுக்க காக்க வைத்த நண்பன்; பாலா வைத்த டஃப் டெஸ்ட்!-தெறித்து ஓடிய இயக்குநர்!

Kalyani Pandiyan S HT Tamil
May 11, 2024 03:18 PM IST

Adham bava on Director Bala : அங்கு உதவி இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர் என்னிடம், நீங்கள் யார் என்று கேட்க, நான் மதுரையில் இருந்து வருவதை சொல்லி, பாலாவை பார்க்க வேண்டும் என்று கூறினேன். உடனே அவர் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு, சென்று விட்டார். மேலே பாலா இருக்கிறார். கீழே அவர் இருக்கிறார்.

Director Bala: ‘9 டு 9.. கால்கடுக்க காக்க நண்பன்.. குறுக்கே வந்த அஜித் பாலாவின் டஃப் டெஸ்ட்..தெறித்து ஓடிய இயக்குநர்!
Director Bala: ‘9 டு 9.. கால்கடுக்க காக்க நண்பன்.. குறுக்கே வந்த அஜித் பாலாவின் டஃப் டெஸ்ட்..தெறித்து ஓடிய இயக்குநர்!

இது குறித்து அவர் பேசும் போது, “திரைத்துறையில் நுழைய வேண்டும் என்று முடிவெடுத்தவுடன், முதல் முறையாக இயக்குநர் பாலாவிடம் சென்று, உங்களிடம் உதவி இயக்குநராக வேண்டும் என்று கேட்டேன். 

பொதுவான நண்பர் பரிந்துரை 

 

பாலாவுக்கும், அமீருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் மதுரையில் இருக்கிறார். அவரின் பரிந்துரையின் பெயரில்தான் பாலாவை சந்திக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது அண்ணா நகரில், அவரது அலுவலகம் இருந்தது. பிதாமகன் முடிந்து, நான் கடவுள் திரைப்படம் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. காலையில் ஒரு 9 மணிக்கெல்லாம் நான் அலுவலகத்திற்கு சென்று விட்டேன். 

நான் கடவுள் படத்திற்காக வந்த அஜித்!

 

அங்கு உதவி இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர் என்னிடம், நீங்கள் யார் என்று கேட்க, நான் மதுரையில் இருந்து வருவதை சொல்லி, பாலாவை பார்க்க வேண்டும் என்று கூறினேன். உடனே அவர் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு, சென்று விட்டார். மேலே பாலா இருக்கிறார். கீழே அவர் இருக்கிறார். மணி 11 கடந்து விட்டது. யாரும் என்னை அழைத்தபாடு இல்லை. 

இதனையடுத்து சரியாக ஒரு 12 மணி அளவில், நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்த டாப் ஹீரோ ஒருவர் வந்தார். நான் அவரைப் பார்த்தவுடன், அப்படியே ஷாக் ஆகி நின்று விட்டேன். சரியாக 2 ½ மணி அளவில், மேலே இருக்கும் இருவருக்கும், உணவு சென்றது. அப்போதாவது என்னை யாராவது அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். 

சாப்பிடாமல் அங்கேயே இருந்து விட்டேன்.

 

ஆனால் யாரும் என்னை அழைக்கவில்லை. சரியாக 4 மணி இருக்கும். அந்த ஹீரோ கீழே இறங்கி, காரில் ஏறி சென்று விட்டார். சாப்பிட போன நேரத்தில் இயக்குநர் கூப்பிட்டு விட்டால், என்ன செய்வது என்பதற்காக நான் சாப்பிடாமல் அங்கேயே இருந்து விட்டேன். 

மணி இரவு 9 ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நான் அந்த அலுவலகத்தில் இருந்திருக்கிறேன். யாரும் என்னை அழைக்க வில்லை. அப்போதே, நான் அவரோடு பணிபுரிய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். நான் காரில் வந்து இருந்தேன். உடனே காரை எடுத்துக்கொண்டு நான் கிளம்பி விட்டேன். சரியாக எம் எம் டி பக்கத்தில் வரும் பொழுது, என்னை பாலாவிடம் பரிந்துரைத்த அந்த நண்பர் அழைத்தார். அவர் என்னிடம் பாலா உன்னை கூப்பிட்டானாமே… அந்த சமயத்தில் நீ அங்கு இல்லையாமே என்று கேட்டார். உடனே நான் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னேன். உடனே அவன் உன்னை சோதித்துப் பார்த்திருக்கிறான். சினிமாவில் பொறுமை மிக மிக முக்கியமல்லவா அதற்காகத்தான் அந்த சோதனை நடந்திருக்கிறது என்று சொன்னார்.

முதல் சோதனையில் தோல்வி 

 

மேலும், முதல் சோதனையிலேயே நீ தோற்று விட்டாயே அவன் அலுவலகத்தில் தான் இருக்கிறான் திரும்பிச் சென்று பார் என்றார் ஆனால், நான் எனக்கு இது சரியாக வரும் என்று தெரியவில்லை என்று சொல்லி, கிளம்பி விட்டேன்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.