DC vs LSG Innings Break: அபிஷேக் போரல் அதிரடி ஓபனிங், ஸ்டப்ஸ் மிரட்டல் பினிஷ்! பந்தாடப்பட்ட லக்னோ பவுலர்கள்-abishek porel tristan stubbs helps delhi capitals to score 208 runs against lsg - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dc Vs Lsg Innings Break: அபிஷேக் போரல் அதிரடி ஓபனிங், ஸ்டப்ஸ் மிரட்டல் பினிஷ்! பந்தாடப்பட்ட லக்னோ பவுலர்கள்

DC vs LSG Innings Break: அபிஷேக் போரல் அதிரடி ஓபனிங், ஸ்டப்ஸ் மிரட்டல் பினிஷ்! பந்தாடப்பட்ட லக்னோ பவுலர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 14, 2024 09:46 PM IST

கடைசி 5 ஓவரில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியால் டெல்லி கேபிடல்ஸ் 72 ரன்களை குவித்தது. அவர் 57 ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்கத்தில் அபிஷேக் போரல் அதிவேகமாக ரன்கள் அடித்து அரைசதமடித்தார். லக்னோ பவுலர்கள் 7 பேர் பவுலிங் செய்த நிலையில், நவீன் உல் ஹக் ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட் எடுத்தார்.

கடைசி நேரத்தில் ஸ்டப்ஸ் மிரட்டல் பினிஷ்
கடைசி நேரத்தில் ஸ்டப்ஸ் மிரட்டல் பினிஷ் (AP)

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது கடைசி போட்டியாக உள்ளது. இதில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை பெறும். மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து ப்ளேஆஃப் வாய்ப்பு அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. லக்னோ அணியை பொறுத்தவரை இன்னும் ஒரு போட்டி மீதம் இருப்பதால் ப்ளேஆஃப் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

டெல்லி அணியில் ஒரு போட்டி தடைக்கு பின் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளையாடுகிறார். வார்னருக்கு பதிலாக குலாப்தீன் நயீப் சேர்க்கப்பட்டுள்ளார். லக்னோ அணியில் அர்ஷத் கான், யுத்வீர் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லக்னோ பவுலிங்

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் அடித்துள்ளது.

அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 57, ஷாய் ஹோப் 38, ரிஷப் பண்ட் 33 ரன்கள் அடித்துள்ளனர். லக்னோ பவுலர்களில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் அர்ஷத் கான், , ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 

போரல் அதிரடி

டெல்லி அணிக்கு சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஓபனர் ஜேக் பிராசர் மெக்குர்க் டக் அவுட்டாகி ஏமாற்றினார். மற்றொரு ஓபனரான இளம் வீரர் அபிஷேக் போரல் தனது வழக்கமான பாணியில் அதிரடியை தொடர்ந்தார்.

பவுண்டரி, சிக்ஸர் என ரன் வேட்டையில் ஈடுபட்ட இவர் 21 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 33 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.

மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஹோப் தன் பங்குக்கு விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். 27 பந்துகளில் 38 ரன்கள் அடித்து அவுட்டானார்.

ஸ்டப்ஸ் பினிஷ்

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 33 ரன்கள் விரைவாக அடித்துவிட்டு அவுட்டானார். அவர் அவுட்டானபோதிலும் கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டினார் ஸ்டப்ஸ். இதனால் கடைசி 5 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் 72 ரன்கள் எடுத்தது.

25 பந்துகளில் 57 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். தனது இன்னிங்ஸில் 3 பவுண்டர் 4 சிக்ஸர்களை அவர் அடித்தார்.

லக்னோ பவுலர்களில் நவீன் உல் ஹக் 4 ஓவரில் 51 ரன்களை வாரி வழங்கியபோதிலும், 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.