DC vs LSG Result: பார்ட்னர்ஷிப் அமையாமல் ஒற்றை ஆளாக நின்ற நிக்கோலஸ் பூரான்! ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் சூழலில் லக்னோ
லக்னோ அணியின் பவுலரான அர்ஷத் கான், பேட்டிங்கில் அதிரடி காட்டி அரைசதமடித்தார். மிடில் ஆர்டரில் அடித்து விளையாடிய போதிலும் பார்ட்னர்ஷிப் அமையாமல் நிக்கோலஸ் பூரான் ஒற்றை ஆளாக நின்றார். தோல்வியை தழுவியதால் ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் சூழலில் லக்னோ சிக்கியுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 64வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 போட்டிகளில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்தது. இரு அணிகளும் ஒரே புள்ளிகளில் இருந்ததால், வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற நிலையில் இருந்தது.
டெல்லி அணியில் ஒரு போட்டி தடைக்கு பின் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளையாடுகிறார். வார்னருக்கு பதிலாக குலாப்தீன் நயீப் சேர்க்கப்பட்டுள்ளார். லக்னோ அணியில் அர்ஷத் கான், யுத்வீர் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி ரன் குவிப்பு
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் அடித்தது.
