தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Santhanam: சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட படக்குழு!

Santhanam: சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட படக்குழு!

Divya Sekar HT Tamil
Apr 14, 2023 12:18 PM IST

DD Returns : எஸ்.பிரேம் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சந்தானம்
சந்தானம்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது அவர் ‘கிக்’ மற்றும் ’வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி அடைந்த திரைப்படம் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியிருந்தார். டிக்கிலோனா திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சந்தானம் மற்றும் இயக்குனர் கார்த்திக் யோகி மீண்டும் வடக்குபட்டி ராமசாமி படத்துக்காக இணைந்தனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கியது.

டிக்கிலோனாவைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் கவுண்டமணியின் பிரபல காமெடியை நியாபகப்படுத்தும் விதமாக குறிப்பாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற வார்த்தையைத் தலைப்பாக வைத்து படப்பிடிப்பைத் தொடங்கினர்.

இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சந்தானம் நடித்த ஒரு சில படங்களை இயக்கிய ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இந்த படத்தின் இயக்குனராக அறிமுகமாகிறார்.

டிடி ரிட்டர்ன்ஸ்
டிடி ரிட்டர்ன்ஸ்

இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக சுரபி நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே நான் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்