Ayothi : அயோத்தி படக்குழுவினருக்கு தங்க செயின் பரிசளித்த சசிக்குமார்!
அயோத்தி படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அயோத்தி படக்குழுவினர், தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு சசிக்குமார் தங்க செயினை பரிசளித்தார்.
சசிகுமார், இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி உட்பட பலர் நடித்து வெளியான படம் அயோத்தி. டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இப்படத்தின் கதை, எங்கும் எதிலும் தான் வைத்ததே சட்டம் என்ற ஆணாதிக்க மனநிலையோடு இருக்கும் தீவிர ராம பக்தரான பல்ராம் (யஷ்பல் ஷர்மா) தன்னுடைய மனைவி, மகள், மகன் என அனைவரையும் கூட்டிக்கொண்டு ஒரு தீபாவளியன்று இராமேஸ்வரத்திற்கு பயணம் செய்கிறார்.
மதுரைக்கு இரவில் வந்திறங்கும் அந்த குடும்பம் கார் ஒன்றை வாடகைப்பிடித்து இராமேஸ்வரத்திற்கு செல்கிறது; செல்லும் வழியில் அந்தக்கார் விபத்துக்குள்ளாகிறது. இதில் பல்ராமின் மனைவியான (ஜானகி) இறந்து போகிறார். விபத்தில் இறக்கும் நபர்களின் உடலை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கமாக இருக்கும் நிலையில், ஷர்மா தங்கள் கலாசாரப்படி உடலை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
இறுதியாக ஜானகி உடல் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? இவர்களுக்கு உதவ வந்த சசிகுமாரின் நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே அயோத்தி படத்தின் கதை.
இந்நிலையில் இப்படம் வெளியாகி மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமான ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அயோத்தி படக்குழுவினர், தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு சசிக்குமார் தங்க செயினை பரிசளித்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.