Top 5 Cinema News: ‘தி கோட் படத்தில் அஜித்.. கடுப்பான போஸ் வெங்கட்.. விஜய் படத்தை கலாய்த்த கார்த்தி..’-tamil cinema top news today september 2 2024 the goat vaazhai thangalan movies update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 5 Cinema News: ‘தி கோட் படத்தில் அஜித்.. கடுப்பான போஸ் வெங்கட்.. விஜய் படத்தை கலாய்த்த கார்த்தி..’

Top 5 Cinema News: ‘தி கோட் படத்தில் அஜித்.. கடுப்பான போஸ் வெங்கட்.. விஜய் படத்தை கலாய்த்த கார்த்தி..’

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 02, 2024 10:24 AM IST

இன்று காலை படிக்க வேண்டிய முக்கியமான சினிமா செய்திகளின் ‘டாப் 5’ செய்திகள் இதோ. விரிவான தகவலை சுருக்கமாக அறிந்து கொள்ள இதை விட எளிய வழி இருக்க முடியாது.

Top 5 Cinema News: ‘தி கோட் படத்தில் அஜித்.. கடுப்பான போஸ் வெங்கட்.. விஜய் படத்தை கலாய்த்த கார்த்தி..’
Top 5 Cinema News: ‘தி கோட் படத்தில் அஜித்.. கடுப்பான போஸ் வெங்கட்.. விஜய் படத்தை கலாய்த்த கார்த்தி..’
  1. ‘இங்கே பிரச்சினையே இது தான்’ -போஸ் வெங்கட் பதிவு

நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள கருத்து, ‘‘இங்க பிரச்சனையே இதுதான்.. ரஞ்சித்தும் மாரியும் 5 ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட கூடாது.. கை ஏந்தி தான் சாப்பிடனும்.. அதானே? ..அப்போ வாழை தொடர்ந்து வரும்.. தங்கலான் வந்து கொண்டே இருப்பான்..’’ என்று தெரிவித்துள்ளார். தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாக இந்த கருத்த பகிரப்பட்டுள்ளது. 

2. விஜய் படத்தை கலாய்த்த கார்த்தி

மெய்யழகன் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் கார்த்தி பேசும் போது, அந்த படத்தை பற்றி மேடையில் பேசிய பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது. வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியது வைரலானது அனைவருக்கும் தெரியும். ‘ஃபைட் வேணுமா.. ஃபைட் இருக்கி.. சாங் வேணுமா.. சாங் இருக்கி.. டான்ஸ் வேணுமா.. டான்ஸ் இருக்கி..’ என்று அவர் பேசியிருந்தார். அதே பாணியில், மெய்யழகன் படவிழாவில் பேசிய கார்த்தி, ‘இந்த படத்தில் ஃபைட் வேணுமா.. ஃபைட் கிடையாது.. சாங் வேணுமா.. சாங் கிடையாது’ என பேசி, நேரடியாக தில் ராஜூவை மட்டுமல்லாமல், விஜய் ரசிகர்களையும் கலாய்த்துள்ளார். கார்த்தியின் இந்த பேச்சை, விழாவில் பங்கேற்ற அவரது ரசிகர்கள், ரசித்து கொண்டாடினர்.

3. தி கோட் படத்தில் அஜித் உறுதி

கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்த இயக்குனர் வெட்கட்பிரபு, சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன் படி, ‘அஜித்-விஜய் இருவரையும் வைத்து படம் எடுக்க கதை ரெடி. கதை இல்லாமல் இல்லை. ரெடி என்றால் ரெடி தான். அஜித் சாரை நான் சந்தித்தது, தி கோட் படத்திற்காக தான். ஆனால், எந்த மாதிரியான எக்ஸ்ப்ரிமெண்ட் என்பதை நீங்கள் படத்தில் பார்ப்பீர்கள். கண்டிப்பாக, அது படத்தில் இருக்கும். அது அவர் குரலில் வருமா? வீடியோவில் வருமா? என்பதை நீங்கள் படத்தில் பார்க்கலாம்.

4. ‘விஜய் ரொம்ப வெறித்தனமா இருக்கார்’ - வைபவ்

பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நடிகர் வைபவ் அளித்த பேட்டியில், ‘‘விஜய் வெறித்தனமா ஆடுறார். ‘நீ ஆடுறயா..’ என்ற என்னிடம் கேட்டார். ‘எனக்கு வராதுனா.. எனக்கு வர்றத, ஏதாவது ஒரு இடத்தில் போட்டுக்கிறேன்’ என்று கூறினேன். இரண்டாவது நாள் அவரிடம் கேட்டேன், ‘என்னணா.. ஆடலாம்னு பார்த்தா இப்படி பண்றீங்க?’ என்று கேட்டேன். ‘ஏன் ஆடு.. இவ்வளவு டான்ஸர் ஆடுறாங்கள.. நீயும் ஓரமா ஆடு’ என்றார். ‘அண்ணே.. வெறித்தனமா ஆடுறீங்க.. ’ என்று சொன்னேன். ‘ஃபேன்ஸ் ப்ரோ.. நமக்காக தியேட்டருக்கு வர்றாங்கல.. அவங்களுக்காக தான்.. அப்படியா இருக்கு டான்ஸ்?’ என்று கேட்டார். ‘இதை வார்த்தையில் சொல்ல முடியாதுணா.. நான் ஓரமா இருந்து பார்த்துக்கிறேன்..’ என்று சொல்லி ஓரமா போய்ட்டேன். அப்புறமும் பார்த்துட்டு, ‘நீ ஆட மாட்டீயா’ என்று கேட்டார். ‘அண்ணே.. இந்த வெறித்தனம் முன்னாடி என்னால முடியாது.. ஆளை விடுங்கனு’ சொல்லிட்டேன்,’’ என்று கூறியுள்ளார்.

5. பாக்கியலட்சுமி தாத்தாவுக்கு விருது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தாவாக நடித்து வரும் ரொஸாரியோவுக்கு, சிறந்த தாத்தாவுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 9வது ஆண்டு விஜய் விருதுகள் வழங்கும் விழாவில், ரொஸாரியாவுக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. கோபிக்கு அப்பாவாக, பாக்யாவுக்கு மாமாவாக, ஈஸ்வரிக்கு கணவராக, செழியனுக்கு தாத்தவாக பல்வேறு பொறுப்புகள் கதாபாத்திரமாக, இந்த கதாபாத்திரம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. மீசையை முறுக்கி, பெருமிதத்தோடு விருதைப் பெற்றுக் கொண்டார் ரொஸாரியோ!

மேலும் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.