TOP 10 NEWS: ’விஜய் உடன் கூட்டணி இல்லை! ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது!’ இன்றைய டாப் 10 செய்திகள்!-todays evening top 10 news including hema committee report rajini interview seeman speech rain warning - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: ’விஜய் உடன் கூட்டணி இல்லை! ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

TOP 10 NEWS: ’விஜய் உடன் கூட்டணி இல்லை! ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

Kathiravan V HT Tamil
Sep 01, 2024 07:30 PM IST

ஹேமா கமிட்டி குறித்து ரஜினி கருத்து, விஜய் உடன் கூட்டணி இல்லை என்று சொன்ன சீமான், இரவு 10 மணி வரை மழை எச்சரிக்கை, நூடுல்ஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

TOP 10 NEWS: ’விஜய் உடன் கூட்டணி இல்லை! ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது!’ இன்றைய டாப் 10 செய்திகள்!
TOP 10 NEWS: ’விஜய் உடன் கூட்டணி இல்லை! ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது!’ இன்றைய டாப் 10 செய்திகள்!

1.ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி தெரியாது

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எதுவும் தெரியாது என  நடிகர் ரஜினி காந்த் பேட்டி. 

2.மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் உட்பட 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3. கார் ரேஸ் குறித்து சீமான் கேள்வி

சென்னையில் யாரை மகிழ்விக்க கார் பந்தய போட்டி நடத்தப்படுகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி. 

4.உதவி ஆணையர் குடும்பத்திற்கு நிதி

சென்னையில் கார் பந்தய பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்த உதவி ஆணையர் சிவக்குமார் குடும்பத்திற்கு மாநகர காவல் ஆணையர் அருண் 25 லட்சம் நிதி உதவி அளித்தார். 

5.நூடுல்ஸ் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 11ஆம் வகுப்பு மாணவி ஜான் ஸ்டெபி ஜாக்குலின் உயிரிழப்பு.

6.விஜய் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா?

விஜய் மாநாட்டுக்கு அனுமதி தருவது குறித்து மாவட்ட எஸ்.பி. முடிவு எடுப்பார் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேட்டி. 

7.செய்தியாளரிடம் நடிகர் ஜீவா வாக்குவாதம்

தேனியில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் நடிகர் ஜீவா வாக்குவாதம். 

8.தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை 

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை. 

9.தமிழக பாடத்திட்டம் மோசம் 

தேசிய பாடத்திட்டங்களை ஒப்பீடு செய்யும் போது தமிழ்நாட்டின் பாடத்திட்டங்கள் மோசமாக உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. 

10. விஜய் உடன் கூட்டணி இல்லை 

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் கட்சி உடன் கூட்டணி இல்லை. விரைவில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பேன் என நாம் தமிழர் கட்சியின் சீமான் பேட்டி. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.