Ajith: 'அஜித் தீண்டாமை செய்கிறார் என சொன்னதே யோகி பாபு தான்.. யோகி பாபு யோக்கிய சிகாமணி கிடையாது’: பிஸ்மி பேட்டி
Ajith: 'அஜித் தீண்டாமை செய்கிறார் என சொன்னதே யோகி பாபு தான்.. யோகி பாபு யோக்கிய சிகாமணி கிடையாது’ என சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்துள்ளார்.
Ajith: யோகி பாபு யோக்கிய சிகாமணி கிடையாது, அஜித் தீண்டாமை செய்கிறார் என சொன்னதே யோகி பாபு தான் என வலைப்பேச்சு புகழ் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு சினிமா பத்திகையாளர் பிஸ்மி அளித்த பேட்டியில், ’’யோகி பாபுவுக்கும் வலைப்பேச்சுவுக்கும் இடையில் எந்தவொரு தனிப்பட்ட பிரச்னை கிடையாது. நாம் உண்மையைச் சொல்வது தான் பிரச்னையாக இருக்கு. வலைப்பேச்சு யூட்யூப் சேனல் பற்றி உங்களுக்குத் தெரியும். யார் மீதும் தனிப்பட்ட வன்மம் கிடையாது. யார் மீதும் தனிப்பட்ட அபிப்பிராயம் கிடையாது. நீங்கள் நல்லது செய்தால், தலையில் வைத்து கொண்டாடுவோம். தவறு செய்தால், சுட்டிக்காட்டுவோம் இது தான் எங்கள் வேலை.
நடிகர் யோகி பாபு விவகாரத்துக்கு வந்தால், அவர் தயாரிப்பாளர்களுக்கு நேர்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவரை வைத்து படமெடுத்து அவஸ்தைப்பட்ட பலபேர் நம்மிடம் வந்து கதறியிருக்கிறார்கள். அதை அவ்வப்போது நாங்கள் செய்திஆக்கிக்கொண்டு வந்துள்ளோம். அவரது திருமணம் குறித்து ஒரு எக்ஸ்க்யூளுசிவ் தகவல் கிடைத்தது. அதையும் நாங்கள் செய்தியாக்கி இருக்கிறோம். இந்த செய்தி வெளியானதும், அவர் உண்மையிலேயே கடுப்பாகிவிட்டார். ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி நடிப்பார்.
பணம்கேட்டுப் பிரச்னை செய்த யோகி பாபு:
படம் ரிலீஸாகும்போது கொஞ்சம் பணம்கேட்டுப் பிரச்னை செய்வார். தயாரிப்பாளர் தரப்பில் பணம் தரவில்லையென்றால், நான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை. நான் நடித்தது கேமியோவாகத் தான் என்றும்,தன்பெயரை பொய் சொல்லி பயன்படுத்துகிறார்கள் என்றும் யோகி பாபு அடித்துவிடுவார். ஆனால், நம் வலைப்பேச்சு டீம், இல்லை, யோகி பாபு ஹீரோவாக நடித்து தான் இருக்கிறார். அவர் வாங்கிய சம்பளம் இவ்வளவு என்று செய்தியில் அம்பலப்படுத்தினோம். அதெல்லாம் அவருக்கு நம் மீது சரியான கடுப்பு.
அதன்பின், அவரது மேனேஜராக இருந்தவர்கள் மூலமாக நம்மிடம் பேசமுயன்றார். அதைப் பெரும்பாலும் வலைப்பேச்சு டீம் முற்றிலுமாகத் தவிர்த்துவிடுகிறது. ஏனென்றால், சந்திக்கணும்னு சொல்வாங்க. பின்னாடி, நம் மண்டையைக் கழுவ முயற்சிப்பார்கள். நம் மீது தங்கள் அதிகாரத்தைச் செலுத்த முயற்சிப்பார்கள். இதனால் தான் யோகி பாபுவைச் சந்திக்காமல் தவிர்த்துவிட்டோம். ஆனால், முன்னாடி எல்லாம், நானும் யோகி பாபுவும் நன்கு பேசிக்கொள்வோம்.
ஒரு கட்டத்தில் நெகட்டிவ் நியூஸ் போட ஆரம்பிச்சதும், தொடர்புகள் குறைய ஆரம்பிச்சிருச்சு. இப்போது என்னவென்றால், சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் நடிகர் யோகி பாபு, அவங்க ஒரு டுபாக்கூர் என்றும், அதன்பின் தங்களை சரிவர கவனிக்கவில்லை(லஞ்சம் கொடுத்து) என்றும் சொன்னதாக சிலரைக் குற்றம்சாட்டுகிறார். இதில் ’அவங்க’ என்று பன்மையில் தான் யோகி பாபு குறிப்பிடுகிறார். மேலும், யோகி பாபுவின் பேட்டியில் பேசியதற்கும் வலைப்பேச்சுக்கும் தொடர்புள்ளதாக ரசிகர்கள் எடிட் செய்து ட்ரெண்ட் செய்தனர்.
யோகி பாபுவுவின் குற்றச்சாட்டுக்கு ரியாக்ட் செய்தோம்: பிஸ்மி!
அப்படி தான் எங்களுக்குத் தெரிந்தது. எனக்கு யூட்யூப் பார்க்கிற பழக்கம் கிடையாது. ஆனால், ரசிகர்கள் மூலமாக நமக்குத் தகவல் கிடைத்ததும் யோகி பாபுவிற்கு பதிலடி கொடுப்பதற்காக அந்த ஆதாரத்தைக் கேட்டோம். ஏதோ ஒரு இடத்தில் நாம் சந்திச்சு பேசியிருந்தால், அதற்குண்டான சிசிடிவி ஆதாரத்தைக் கொடுங்கன்னு சொல்லியிருந்தோம். அப்படி, நாங்கள் பணம் கேட்டிருந்தால், நீங்கள் வணங்குகிற முருகன் மீது சத்தியமிட்டுச் சொல்லுங்கன்னு சொல்லியிருந்தோம். அடுத்து, சிலர் பொய்சத்தியம் செய்ய வாய்ப்பு இருக்குங்கிறதால், அவரது பிள்ளைகளின் மீது சத்தியம் செய்யச்சொல்லி இருந்தோம்.
இதற்கிடையே சோசியல் மீடியாவில் யோகி பாபு முருகன் போட்டோவைப் போடுகிறார். நீங்க போட்டோ எல்லாம்போட வேண்டாம், நீங்கள் சொன்னது உண்மை என்றால், முருகன் மீது சத்தியம் பண்ணிக்காட்டுங்க. இது மத்தவங்க பேசினால் பரவாயில்லை. யோகி பாபு பேசலாமா, அவர் பேசின உண்மைன்னு நம்புறதுக்கு ஒரு கூட்டம் இருக்கு. அதனால் தான், நாங்கள் எங்கள் நேர்மையை வெளிக்காட்ட ரியாக்ட் செய்தோம்.
பல வருடங்களுக்கு முன்பு, வலிமை படப்பிடிப்பில், யோகி பாபு அஜித்தின் கையைப் பிடித்தபோது, தொடவேண்டாம் என்று அஜித் சொன்னதாக யோகி பாபு வருத்தப்பட்டு எங்களிடம் பேசியிருக்கிறார். அதைத்தான் நாங்கள், அஜித் பெயரை சொல்லாமல் செய்தியாக எழுதினோம். ஆனால், எனக்கு அஜித் பற்றி தெரியும். அஜித் செய்ததுக்குப் பின், ஒரு காரணம் இருக்கலாம்.
இப்படி இருக்கும்போது, நடிகர் யோகி பாபு தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக்கொள்ள முயன்றார். அப்போதுதான், அஜித்தின் பெயரை நாங்கள் வெளியில் சொல்ல வேண்டியதாயிற்று’’என வலைப்பேச்சு பிஸ்மி பேசி முடித்தார்.
நன்றி: ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனல்
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!