Baakiyalakshmi: ‘எலுமிச்சையை வெட்டி… செய்வினை வைக்கிறாங்க சார்’ -பாக்கியலட்சுமி கோபி காவல்நிலையத்தில் கதறல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Baakiyalakshmi: ‘எலுமிச்சையை வெட்டி… செய்வினை வைக்கிறாங்க சார்’ -பாக்கியலட்சுமி கோபி காவல்நிலையத்தில் கதறல்!

Baakiyalakshmi: ‘எலுமிச்சையை வெட்டி… செய்வினை வைக்கிறாங்க சார்’ -பாக்கியலட்சுமி கோபி காவல்நிலையத்தில் கதறல்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 26, 2024 03:58 PM IST

Baakiyalakshmi: கோபமடைந்த அந்த பெண், செல்போன் மூலம் நடிகர் சதீஷூக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கூறப்படுகிறது. - பாக்கியலட்சுமி கோபி காவல்நிலையத்தில் கதறல்!

Baakiyalakshmi: ‘எலுமிச்சையை வெட்டி… செய்வினை வைக்கிறாங்க சார்’ -பாக்கியலட்சுமி கோபி காவல்நிலையத்தில் கதறல்!
Baakiyalakshmi: ‘எலுமிச்சையை வெட்டி… செய்வினை வைக்கிறாங்க சார்’ -பாக்கியலட்சுமி கோபி காவல்நிலையத்தில் கதறல்!

செல்பி கொடுக்க மறுப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ்குமார். அந்த சீரியலில் இரு மனைவிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் கோபி கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறது. திருவான்மியூரில் வசித்து வரும் இவர், கடந்த ஆண்டு அறுபடை முருகன் கோயிலுக்கு சென்று இருக்கிறார்.

அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் இவருடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு நடிகர் சதீஷ் மறுப்பு தெரிவித்த்தாகவும் சொல்லப்படுகிறது. இதில் கோபமடைந்த அந்த பெண், செல்போன் மூலம் நடிகர் சதீஷூக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எல்லைமீறிய அந்தப்பெண், நடிகர் சதீஷ் வீட்டு வாசலில் செய்வினை வைக்கும் விதமாக, எலுமிச்சம் பழத்தை வைத்து மிரட்டல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சதீஷ் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எங்களைப்பற்றி

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: