தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Simbu Movie Pathu Thala Release Date Announced

Pathu Thala Release Date : சிம்புவின் பத்து தல ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Divya Sekar HT Tamil
Dec 31, 2022 12:05 PM IST

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது .

சிம்புவின் பத்து தல
சிம்புவின் பத்து தல

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வெற்றிக்கு பிறகு அடுத்ததாக கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். செப்டம்பர் வெளியான இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. 

சிம்புவின் படங்கள் சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது. அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை சிம்பு கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்த படமாக ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணாவின் மூன்றாவது தமிழ் படமான பத்து தல திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். 

இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் வில்லனாக நடிக்கிறார். கெளதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 2017ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த 'மஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் 2023ஆம் ஆண்டு, மார்ச் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு சுமார் 1 மாதம் முன்னதாக சிம்புவின் பத்து தல வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்