தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shalu Shammu: 'இப்படி பண்றீங்களே யாரை தான் நம்புவது'- விரக்தியின் உச்சத்தில் புலம்பிய ஷாலு ஷம்மு

Shalu Shammu: 'இப்படி பண்றீங்களே யாரை தான் நம்புவது'- விரக்தியின் உச்சத்தில் புலம்பிய ஷாலு ஷம்மு

Aarthi V HT Tamil
Apr 23, 2023 11:36 AM IST

நடிகை ஷாலு ஷம்முவின் ஐ போன் டன்சோ மூலம் கிடைத்துள்ளது.

ஷாலு
ஷாலு

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு கிளாமராக போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் ஷாலு ஷம்மு கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நண்பர்களுடன் எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இரவு பார்ட்டியில் பங்கேற்றுள்ளார்.

அதன் பின்னர் தனது நண்பர் வீடு சூளைமேட்டில் இருப்பதால் அவரது வீட்டில் இரவு தங்கி உள்ளார். காலை எழுந்த பார்த்த போது அவர் தனது செல்போன் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 2 லட்ச ரூபாய் மதிப்புக்கொண்ட IPhone 14 Pro Max காணாமல் போனதற்கு அவரது நண்பர் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்ட நிலையில் உடனே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்று மதியம் ஷாலு ஷம்முவின் வீட்டுக்கு டன்சோவில் ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் அவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட ஐபோன் இருந்து உள்ளது. அதை பார்த்து ஷாலு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "நான் சந்தேகப்பட்ட நபர் தான் எனது செல்போனை திருடியுள்ளார். 8 வருட நட்பு வீணாக போனது" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். ஷாலு சாமுவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

IPL_Entry_Point

டாபிக்ஸ்