தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetharaman:மதுமிதாவை பெண் பார்க்க வந்த மகாலட்சுமி.. சீதாவை ரூமில் அடைத்த சித்தி

Seetharaman:மதுமிதாவை பெண் பார்க்க வந்த மகாலட்சுமி.. சீதாவை ரூமில் அடைத்த சித்தி

Aarthi V HT Tamil
Feb 22, 2023 11:46 AM IST

சீதாராமன் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

சீதாராமன்
சீதாராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவின் வீட்டில் மகாலட்சுமி மதுமிதாவை பெண் பார்க்க வந்து காத்துக் கொண்டிருக்கிற மறுபக்கம் மதுமிதாவின் காதலன் சூர்யா மதுமிதாவை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறான்.

ஆனால் மதுமிதா நான் கண்டிப்பாக அப்பாவிடம் பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி விடுவேன், இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என சொல்லி வீட்டுக்கு வருகிறாள்.

மதுமிதாவின் வீட்டில் அவளது சித்தி சீதாவை பார்த்தால் கல்யாணம் நின்றுவிடும் என சொல்லி ஒரு ரூமில் பூட்டி வைக்க சீதா தன்னுடைய அக்காவுக்காக டிரஸ் தைத்து கொண்டு இருக்கிறாள்.

சூர்யாவிடம் கல்யாணம் வேண்டாம் என சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும் மதுமிதா வீட்டில் தன்னை பெண் பார்க்க வந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறாள். அவளது குடும்பத்தார் வீட்டுக்கு வந்ததும் அவளை தயார் செய்து கூட்டி வந்து அனைவர் முன்னிலையிலும் உட்கார வைக்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்