தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rumours Spreading That Simbu Is Going To Marry Varalakshmi

Simbu Marriage: ரியல் ஜோடியாக மாறும் ரீல் ஜோடி.. இந்த நடிகையுடன் சிம்புவிற்கு நடக்க போகும் திருமணம்?

Aarthi Balaji HT Tamil
Jan 28, 2024 08:47 AM IST

நடிகர் சிம்புவிற்கு பிரபல நடிகையுடன் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவிற்கு நடக்க போகும் திருமணம்
சிம்புவிற்கு நடக்க போகும் திருமணம்

ட்ரெண்டிங் செய்திகள்

கிட்டத்தட்ட முப்பது கிலோ எடையை குறைத்துவிட்டு ரீ-என்ட்ரி கொடுத்தார், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே பல பிரச்னைகள், சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்புவின் பெற்றோர் ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் சிம்புவுக்கு திருமணத்திற்காக வரன் தேடி வருகிறார்கள்.

இருப்பினும், 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணமாகாமல் தனிமையில் இருக்கிறார். இதன் காரணமாக அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன . 

சிம்பு இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது . முன்னதாக சிம்புவும், நயன்தாராவும் காதலித்து வந்தனர். 

ஆனால் இருவரும் பின்னர் பிரிந்தனர். பின்னர் நடிகை ஹன்சிகாவும், சிம்புவும் காதலிப்பதாக தகவல் வெளியானது . பின்னர் ஹன்சிகாவும் பிரிந்தார். சமீபத்தில் தெலுங்கு நடிகை நிதி அகர்வாலும், சிம்புவும் காதலிப்பதாகவும் , விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின . ஆனால், அது வெறும் வதந்தி தான். 

இந்நிலையில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சிம்புவுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவதால் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணுகிறார் . இதற்காக சிம்பு தீவிரமாக பெண் தேடுகிறார்.

மேலும், தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி மகளை திருமணம் செய்ய டி ராஜேந்தர் முடிவு செய்துள்ளார். அவர் வேறு யாருமல்ல நடிகை வரலட்சுமி. 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடி ராதிகா - சரத்குமார் . சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் வரலட்சுமி. விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அவர் திரைப்பட அறிமுகமானார் . 

குணச்சித்திர வேடங்களிலும், வில்லி கேரக்டரிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் வரலட்சுமி. இவரும் விஷாலும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் , இருவரும் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது . 

சிம்பு  மற்றும் வரலட்சுமி திருமணம் செய்து கொள்ள உள்ளனர். எனினும் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருவரும் திருமணம் செய்து கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரீல் ஜோடிகளாக இருந்த இவர்கள் ரியல் ஜோடிகளாக மாறினால் மிகவும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.