தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rrr: நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்!

RRR: நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்!

Manigandan K T HT Tamil
Jan 17, 2023 03:37 PM IST

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது வென்றது.

நடிகர் ஜூனியர் என்டிஆர்
நடிகர் ஜூனியர் என்டிஆர்

ட்ரெண்டிங் செய்திகள்

நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த விழாவில் இயக்குநர் ராஜமௌலியுடன் ஹீரோக்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் குடும்பத்தினர் உட்பட அனைவருடன் விருது விழாவிற்கு சென்று இருந்தனர்.

ஆர்ஆர்ஆர் படக் குழுவினருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டநாயகன் சூர்ய குமார் யாதவ்,நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்து வாழ்த்து கூறினார். அந்தப் பதிவில், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் பிரதர். கு

அவருடன் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கோல்டன் குளோப் வென்றதற்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்று சூர்ய குமார் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

Thalapathy 67 :இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே- விஜய் படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்

அந்தப் புகைப்படத்தில் சூர்யகுமார் யாதவ், அவரது மனைவி தேவிஷா ஷெட்டி, நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் புன்னகையுடன் காணப்படுகின்றனர்.

இந்தப் புகைப்படத்துக்கு ஆயிரக்கணக்கானோர் லைக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதுவரை 8,500 க்கும் மேற்பட்டோர் இந்தப் பதிவை ரிடுவீட்டும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்