தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pradeep: தக் லைஃப்.. பதிலடியோடு கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரதீப்

Pradeep: தக் லைஃப்.. பதிலடியோடு கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரதீப்

Aarthi V HT Tamil
Nov 07, 2023 12:59 PM IST

கமல் ஹாசன் பிறந்தநாளுக்கு பிரதீப் வாழ்த்து சொல்லி ட்விட் செய்து உள்ளார்.

கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரதீப்
கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பிரதீப்

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு வாங்கி வெளியேறிய பிரதீப், கமல் ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், “ சத்தியமா சொல்றேன். நான் கமல் ஹாசனின் பெரிய ரசிகன்.

உங்களுக்கு 69 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவுக்கு உங்கள் கலை மற்றும் பங்களிப்புகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. லவ் யூ #நல்ல இருங்க #தீரவிசாரிபதேமேய் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. பெண் போட்டியாளர்கள் படுத்திருப்பதை பார்த்துக் கொண்டு இருக்கிறார், டாய்லெட் போகும்போது கதவை சாத்தாமல் போகிறார், பெண்களிடம் காதல் செய்ய சொல்கிறார், எல்லை மீறி கெட்ட வார்த்தை பேசி வருகிறார் உள்ளிட்ட காரணங்களால், ரெட் கார்டு கொடுத்து அனுப்பிவிட்டார்கள். மேலும் அவரை சேனல் வெளியே அனுப்பவில்லை என்றால், நான் வெளியே சென்று இருப்பேன் என கமல் ஹாசன் கூறி இருந்தார். 

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் கடைசி வாய்ப்பு கூட பிரதீப்பிற்கு கொடுக்கவில்லை என பலரும் கமல் ஹாசனை சாடி வருகின்றனர். அதே போல் விசாரித்து இருந்தால் அவரின் நியாயம் வெளியே வந்து இருக்கும், அதை கமல் தடுத்துவிட்டார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு பதில் கொடுக்க கூட கமல் ஹாசன் அனுமதி தரவில்லை என்றாலும், அவருக்காக பிரதீப் வாழ்த்து கூறியது ரசிகர்களை கவர்ந்து உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்