தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pathan Stopped: பதான் படம் பாதியில் நிறுத்தம்: வாக்குவாதம் பரபரப்பு!

Pathan Stopped: பதான் படம் பாதியில் நிறுத்தம்: வாக்குவாதம் பரபரப்பு!

Aarthi V HT Tamil
Jan 25, 2023 01:26 PM IST

சென்னையில் பிரபல திரையரங்கத்தில் பதான் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால், பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பதான் படம் பாதியில் நிறுத்தம்
பதான் படம் பாதியில் நிறுத்தம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஷாருக்கானின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பதான் படத்தின் வெளியீட்டை ஒட்டி , அவரது ரசிகர்கள் மும்பை முழுக்க திரையரங்குகளில் உயரமான மிகப்பெரிய பேனர்களை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் கூடினர்.

படத்தைப் பார்த்த ஷாருக்கானின் ரசிகர்கள் அனைவரும் படம், ஒரு சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருப்பதாகவும், ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆப்ரஹாமின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிவிஆர் திரையரங்குகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதான் படம் நிறுத்தப்பட்டது. இதனால் பத்திரிக்கையாளர்களும் படம் பார்க்க வந்த பொது மக்களும் தியேட்டர் நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்தனர். படம் காலை 10. 30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் பிற்பகல் வரை படம் ஆரம்பிக்கவில்லை என ரசிகர்கள் தெரிவித்தனர்.

இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் பிவிஆர் சினிமாஸ் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திரைப்பட தொழில் நிபுணர் தரன் ஆதர்ஷ் பதான் முதல் நாள் வசூல் தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டில் , “ முதல் நாளிலேயே 4 லட்சம் டிக்கட்டுகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை மாலை வரை 3.9 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டது” எனக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பாக பதான் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே அதில் வரும் காட்சிகள், தீபிகா படுகோனேவின் காவி நிற உடை ஆகியவை இந்து மதத்தைப் புண்படுத்துவதாகக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

சமீபகாலமாக பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வந்த ஷாருக்கானின் இப்படம் மீண்டும் பாலிவுட் திரையுலகில் தனது வெற்றி பாதைக்குத் திரும்பி உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்