தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mithran: ‘அந்தப்படத்துக்கு டைரக்டர் நான் இல்ல’- திருச்சிற்றம்பலம் மித்ரன் பகீர்!

Mithran: ‘அந்தப்படத்துக்கு டைரக்டர் நான் இல்ல’- திருச்சிற்றம்பலம் மித்ரன் பகீர்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 25, 2023 01:55 PM IST

Mithran R Jawahar: தன்னுடைய பெயரை அரியவன் படக்குழு தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதாக திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் பேசி இருக்கிறார்

தனுஷ் பட இயக்குநர் குற்றசாட்டு!
தனுஷ் பட இயக்குநர் குற்றசாட்டு!

ட்ரெண்டிங் செய்திகள்

அரியவன்
அரியவன்

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகனாக ஈஷான் மற்றும் நாயகியாக ப்ரணாலி ஆகியோர் நடித்திருக்கின்றனர். மார்ச் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது.

அரியவன் ஆடியோ வெளியீட்டு விழா!
அரியவன் ஆடியோ வெளியீட்டு விழா!

படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட விழாவில் படத்தின் இயக்குநரான மித்ரன் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இது கோலிவுட்டில் பேசு பொருளான நிலையில் மித்ரன் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு இது குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ அரியவன் படத்தை டைரக்ட் செய்தது என்னிடம் வேலை பார்த்த உதவி இயக்குநர்;அவனுக்கு உதவியாக சில நாட்கள் கதை விவாதம் மற்றும் ஷூட்டிங்கில் நான் இருந்தேன். 

அவ்வளவுதான் எனக்கும் அந்தப்படத்திற்கும் இடையே உள்ள தொடர்பு. மற்ற படி அந்தப்படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படத்தின் பப்ளிசிட்டிக்காக அவர்கள் என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளனர்; இதை மக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டேன். அதில் தான் இப்போது என் கவனம் உள்ளது” என்று பேசி இருக்கிறார். மித்ரன் R ஜவஹர் அடுத்ததாக மாதவன் நடிக்க இருக்க கூடிய படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்