Dhanush: அப்டேட் மேல் அப்டேட்.. படம் ஹிட் ஆன உடனே இயக்குநரை பிடித்துக் கொண்ட தனுஷ்..-lubber pandhu director joins actor dhanush next project - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush: அப்டேட் மேல் அப்டேட்.. படம் ஹிட் ஆன உடனே இயக்குநரை பிடித்துக் கொண்ட தனுஷ்..

Dhanush: அப்டேட் மேல் அப்டேட்.. படம் ஹிட் ஆன உடனே இயக்குநரை பிடித்துக் கொண்ட தனுஷ்..

Malavica Natarajan HT Tamil
Oct 02, 2024 05:35 PM IST

Dhanush: நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் வெளியான பிறகு தனது அடுத்த படங்களின் அப்டேட் மேல் அப்டேட் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், தற்போது தனது முதல் படத்திலேயே கோலிவுட்டை கலக்கி இருக்கும் இயக்குநர் ஒருவருடன் அடுத்த படத்தில் தனுஷ் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush: அப்டேட் மேல் அப்டேட்..  படம் ஹிட் ஆன உடனே இயக்குநரை பிடித்துக் கொண்ட தனுஷ்..
Dhanush: அப்டேட் மேல் அப்டேட்.. படம் ஹிட் ஆன உடனே இயக்குநரை பிடித்துக் கொண்ட தனுஷ்..

இந்நிலையில், தனது 50வது படமான ராயனின் வெற்றிக்குப் பிறகு தான் அடுத்தடுத்து நடிக்கப்போகும் படங்கள் குறித்த அறிவிப்பை அவர் தொடர்ந்து வெளியிட்டு வந்த வண்ணமாக உள்ளார்.

அந்தவகையில், நடிகர் தனுஷ் தற்போது லப்பர் பந்து படத்தின் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமாவில் என்ட்ரி

நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நாயகனாக நடித்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். இவரது குடும்பமும் கோலிவுட்டில் அனைவராலும் அறியப்பட்டவர்கள் தான். இருப்பினும் தனுஷ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் ஒல்லியான தேகத்துடன் காணப்பட்டார். இதனால், ஸ்கூல் பையன், பென்சில் என பலராலும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

தீவிரமாக உழைத்த தனுஷ்

இந்த பெயர்களை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், காதல் கொண்டேன் தொடங்கி திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான், தேவதையைக் கண்டேன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இவருக்கு கோலிவுட்டில் மாஸ் என்ட்ரி கொடுக்க வைத்த திரைப்படம் என்றால் அது புதுப்பேட்டை தான். இந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை. ஆனால், பின்னாளில் இந்தப்படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு, ரீ ரிலீஸும் செய்யப்பட்டது.

மாஸ் ஹீரோவான தனுஷ்

இதனால், காமெடி, காதல், குடும்ப சென்டிமெண்ட் திரைப்படங்களில் நடித்து வந்தவர் மாஸ் ஹூரோ படங்களில் கவனம் செலுத்தினார். இவர் கிளைமேக்ஸ் காட்சியில் சட்டையைக் கழற்றி சண்டை போட்டாலே படம் ஹிட் ஆகும் என்ற பேச்சுகளும் கோலிவுட்டில் உலாவி வந்தது குறிப்பிடத்தக்கது.

பின் இவர் நடிப்பில் வெளியான அசுரன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் தனது நடிப்பை மேலும் தீவிரமாக வழங்கினார்.

ராயனுக்கு பின் ஏற்றம் தான்

இந்த நிலையில் தான் தனுஷ் தனது 50வது திரைப்படமான ராயனை இயக்கி நடித்தார். வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அதே சமயத்தில் சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்திலும் நடித்த வருகிறார்.

அதுமட்டுமின்றி, இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். அதைத் தொடர்ந்து, நித்யா மேனன், பாரதிராஜா கூட்டணியில் இட்லி கடை எனும் படத்தையும் இயக்க உள்ளார்.

இப்படி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக சுற்றிவரும் தனுஷ் தனது அடுத்த படத்திற்கும் தயாராகவிட்டதாக சினிமா வட்டாரத்தினர் கூறகின்றனர்.

மீண்டும் ஓர் அறிவிப்பு

புதுமுக இயக்குநரான தமிழசரன் பச்சைமுத்து இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை சினிமா வட்டாரத்தினரும் ரசிகர்களும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தான், இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து நடிகர் தனுஷை சந்தித்து தனது அடுத்த படத்திற்கான கதையைக் கூறியுள்ளார். இந்தக் கதை பிடித்து போனதால், நடிகர் தனுஷ் இயக்குநர் தமிழரசனுடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனால், தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளார்களாம்.

ஏற்கனவே, திருமண உறவிலிருந்து பிரிந்து வாழ்ந்து வரும் தனுஷும் அவர் மனைவி ஐஸ்வர்யாவும் குழந்தைகளின் நலனுக்காக தங்களது ஈகோவை விட்டுக் கொடுப்போம் எனக் கூறி மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவியதில், அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இப்போது, அடுத்தடுத்த படங்களல் கமிட் ஆகி அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறார் நடிகர் தனுஷ்.

Whats_app_banner