Box Office Today: செம கலெக்ஷன்.. துள்ளி குதிக்கும் லப்பர் பந்து- வெளியேறிய கோட் - பாக்ஸ் ஆபீஸ் வசூல்
Box office Today: கோட், மெய்யழகன், நந்தன், லப்பர் பந்து, கடைசி உலகப்போர் உள்ளிட்ட திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை இங்கே பார்க்கலாம்!

Box Office Today: செம கலெக்ஷன்.. துள்ளி குதிக்கும் லப்பர் பந்து- வெளியேறிய கோட் - பாக்ஸ் ஆபீஸ் வசூல்
Box office Today: தேவாரா
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான திரைப்படம் "தேவாரா". இந்த படமானது, இந்திய அளவில் 160.6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
லப்பர் பந்து
தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி உள்ளது. ஆனால், அவை அனைத்தும் வெற்றி பெற்றதா? என கேள்வி எழுப்பினால், பதில் சொல்வது சந்தேகம் தான். அதே போல் ஒரு சில கிரிக்கெட் படங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸாகி ஹிட்டான வரலாறும் இருக்கிறது.
அந்த வகையில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியான சமீபத்திய ரிலீஸ் லப்பர் பந்து. இந்தத் திரைப்படம் 12 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 22 கோடி வரை வசூல் சாதனை செய்து உள்ளது.