Kubera: பிறந்தநாளில் யாசகர் போன்ற தோற்றத்தில் தனுஷ் - குபேரா படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்!
Kubera: பிறந்தநாளில் யாசகர் போன்ற தோற்றத்தில் தனுஷ் இருக்கும் படத்தை குபேரா படக்குழு வெளியிட்டுள்ளது.

Kubera: நடிகர் தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தின் படக்குழு, அவரது புதிய தோற்றப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் மொழியில் நடிக்கத் தொடங்கி, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் வரை சென்றுவிட்டார். இவர் நடித்த 3 திரைப்படத்தில் இடம்பெற்ற ’’ஒய் திஸ் கொலைவெறிடி’’ எனும் பாடல், தனுஷின் புகழை முதலில் உலகளவில் வெளிச்சமிட்டுக் காட்டியது. இளம் வயதில் இதுவரை 2 தேசிய விருதுகளை வென்ற நடிகர் என்னும் பெயரையும் தனுஷ் பெற்றிருக்கிறார்.
சினிமாவில் பன்முகக் கலைஞர் தனுஷ்:
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல துறைகளிலும் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தனது திறமையையும் நிரூபித்து வருகிறார், தனுஷ். அந்த வகையில் நடிகர் தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்தபோது, நடிகர் ராஜ்கிரண் மற்றும் ரேவதியை, கதையின் மாந்தர்களாக வைத்து இயக்கி நடித்த படம்தான், பவர் பாண்டி.