Dhanush: இதுவரைக்கும் யாரைப் பார்த்தும் இப்படி சொன்னதில்லை.. நடிகையை தனியாக அழைத்து பேசிய தனுஷ்..
Dhanush: சினிமாவில் இதுவரை தான் யாரைப் பார்த்தும் பொறாமைப் பட்டதே இல்லை. ஆனால், உன்னைப் பார்த்தால் மிகவும் பொறாமையாக இருக்கிறது என நடிகை ஒருவரிடம் கூறியுள்ளாராம் நடிகர் தனுஷ்.

நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார். இவரின் அசுரத்தனமான நடிப்பால், சினிமா நடிகர்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறிவருகின்றனர். இதுமட்டுமின்றி, இவர் தனது திறமையால் ஹாலிவுட் படத்திலும் நடித்து பெயர்பெற்றுள்ளார்.
இவருடன் ஏதாவது ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என சினிமா நடிகர்களும் கலைஞர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், இவருக்கு சினிமாவில் நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளதாம். அதனால், சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைக்கு அந்த வாய்ப்பு கிட்டியதால் அவரைக் கண்டு பொறாமையாக இருக்கிறது எனவும் கூறியுள்ளாராம். யார் அந்த நடிகை? தனுஷின் நிறைவேறாத ஆசை என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
துள்ளுவதோ இளமையில் தொடங்கிய பயணம்
நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நாயகனாக நடித்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். இவரது குடும்பமும் கோலிவுட்டில் அனைவராலும் அறியப்பட்டவர்கள் தான். இருப்பினும் தனுஷ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் ஒல்லியான தேகத்துடன் காணப்பட்டார். இதனால், ஸ்கூல் பையன், பென்சில் என பலராலும் விமர்சனத்திற்கு உள்ளானார்.