தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Movies Release In Theatre: இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

Movies Release In Theatre: இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள் என்னென்ன?

Aarthi V HT Tamil
Jul 06, 2023 10:33 AM IST

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள்
இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் படம், இன்பினிட்டி. த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில் நடிகர் நட்ராஜ் நடித்துள்ளார். இப்படத்தை சாய் கார்த்திக் இயக்கி உள்ளார். படத்தின் கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்து உள்ளார். இந்தப் படம் நாளை (ஜூலை 7) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பம்பர்

அறிமுக இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில் உருவகி இருக்கும் திரைப்படம் பம்பர். இதில் வெற்றி கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை ஷிவானி நாராயணன் நடித்து இருக்கிறார். வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். தங்கதுரை, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். பம்பர் படம் நாளை (ஜூலை 7) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

காடப்புறா கலைக்குழு

அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம், காடப்புறா கலைக்குழு. இதில் நடிகர்கள் முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். முற்றிலும் கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில் காடப்புறா கலைக்குழு படம்  உருவாகி உள்ளது. காடப்புறா கலைக்குழு படம் வரும் ஜூலை 7 ஆம் தேதி திரைங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்