தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kayal Anandhi Opens About Pregnancy Struggle

Kayal Anandhi: 8 மாதம் உழைப்பு.. அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தை..மகன், கணவர் பற்றி மனம் திறந்த கயல் ஆனந்தி

Aarthi Balaji HT Tamil
Feb 27, 2024 12:40 PM IST

கயல் ஆனந்தி தன் மகன் தொடர்பாக முதல் முறையாக பேட்டி அளித்து உள்ளார்.

கயல் ஆனந்தி காதல்!
கயல் ஆனந்தி காதல்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனந்தி கடந்த 2021 ஆம் ஆண்டு சாக்ரடீஸ் என்பவருடன் திடீர் திருமணம் செய்து கொண்டார். சாக்ரடீஸ் மூடர்கூடம் நவீனின் மைத்துனர் ஆவார். இவர் அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தன் மகன் தொடர்பாக கயல் ஆனந்தி முதல் முறையாக பேட்டி அளித்து உள்ளார். அதில், “தினமும் என் மகனை பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புதிய விஷயம் செய்து கொண்டே இருப்பான். படப்பிடிப்புக்கு போனால் அவரை மிகவும் மிஸ் பண்ணுவேன். இப்போ பேச ஆரம்பிச்சப்போ, வீட்டுக்கு போனவுடனே வந்து சொல்லுவாரு மிஸ் யூ அம்மா என்று. டெலிவரி ஆகும் வரை ஷூட்டிங்குக்குப் போனேன். கர்ப்பமான 8 ஆவது மாதம் வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.

கர்ப்ப காலத்தில் என் பெற்றோரும் என் கணவரும் என்னை நன்றாகப் பார்த்தார்கள். அறுவை சிகிச்சை மூலம் என் மகன் பிறந்தான். அது எனக்கு சாதாரண பிரசவம் அல்ல. அதனால் குழந்தை பிறந்து முதல் 3 நாட்கள் என்னால் பார்க்க முடியவில்லை. என் கணவர் ஒரு தாய். அவர் தான் பார்த்து கொண்டார். பிளேட்டோ எனக்கு ஒரு மகனாக பிறந்து இருப்பதை நினைத்தால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்” என்றார்.

முன்னதாக அவர் அளித்த பேட்டியில், "நான் என்னுடைய மகனுக்கு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடவில்லை, சாதியில்லா சான்றிதழ் தான் பெற்றுள்ளேன்.

இதற்கு முக்கிய காரணம் நாம் அனைவரும் முன்பு எல்லாம் சாதி பெயரை சுமந்துட்டு இருந்தாங்க. நான் என் மகனுக்கு அது தொடர விரும்பவில்லை. இந்த முடிவிற்கு காரணம் நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்த நபர்களுடனான உரையாடல் மூலமாக எனக்கு தோன்றியது. தொடர்ந்து காதல் கணவர் பற்றி பேசுகையில், “முதன்முறையாக அவரை பார்க்கும் போதே, இவர்தான் நம்முடைய வாழ்க்கைத் துணை என்று ஸ்பார்க் அடித்து விட்டது. அவரை பார்க்கும் போது எனக்கு கிடைத்த ஃபீல் வேறு யாரிடமும் வரவில்லை

கிட்டத்தட்ட ஒரு வருடம் நண்பர்களாக பழகினோம். நாங்கள் பணியாற்றிய படத்தின் இயக்குநர் அவரின் உறவினர்தான். அவர் எங்களை பார்த்துக்கொண்டே இருந்தார். இதனையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவரது குடும்பத்தில் அவர் பேசி இருக்கிறார்.

இதற்கிடையே இவரும் என்னிடம் எப்போது கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறீர்கள். உங்களுடைய ஐடியா என்ன என்றெல்லாம் கேட்டார்.

என்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் என்னுடைய அப்பா இருப்பார். அப்போது அவர் இவரை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். இவருடைய குணம், நடந்து கொள்ளும் விதம் என எல்லாமும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனையடுத்துதான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

எனக்கு தற்போது குழந்தையும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னுடைய குழந்தையை பார்த்துநான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னுடைய கணவரும் எனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கிறார்” என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்