தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ஆனந்த்தை சந்தித்து உண்மையை உடைத்த ரியாவின் கணவர்.. அடுத்து நடக்க போவது என்ன?

Karthigai Deepam: ஆனந்த்தை சந்தித்து உண்மையை உடைத்த ரியாவின் கணவர்.. அடுத்து நடக்க போவது என்ன?

Aarthi Balaji HT Tamil
Apr 30, 2024 12:56 PM IST

Karthigai Deepam serial: ஐஸ்வர்யா ஆனந்தை கூப்பிட்டு கார்த்திக்கை வேலையில் இருந்து அனுப்ப என்னிடம் ஒரு வழி இருப்பதாக சொல்லி எதையோ ஒன்றை சொல்ல ஆனந்த் நீ சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன் என்று கிளம்பி செல்கிறான்.

கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தியும் தீபாவும் ரியா பற்றி ஆனந்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்த நிலையில் இன்று ( ஏப்ரல் 30 ) நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மதுவை வீட்டிற்கு வரவைத்து ஆனந்திடம் அவளை பற்றிய எல்லா விஷயங்களையும் தெரியப்படுத்துகின்றனர், அதன் பிறகு தீபாவும் ஆமாம் மாமா அவர் சொல்றது எல்லாமே உண்மை தான் என்று சொல்ல ஆனந்தால் அதை முழுமையாக நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

பிறகு மது வெளியே கிளம்பி வரும் போது ரியா இதை பார்த்து விட ஆனந்துக்கு எல்லா உண்மையும் தெரிந்துடுச்சோ என்று அதிர்ச்சி அடைகிறாள், ஆனந்திடம் வந்து தீபா தன்னை அறைந்து விட்டதாகவும் அத்தை எதுவுமே கேட்கவில்லை என்றும் பிளேட்டை மாற்றி பேசுகிறாள்.

இதனால் ஆனந்த் அப்படியா? நீ அவளை சும்மாவா விட்ட என்று கேட்க ரியா வேண்டாம் நீ அவகிட்ட எதுவும் கேட்க வேண்டாம், இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டாம், பிரச்சனை வேண்டாம்னு தான் சொல்லாமல் இருந்தேன் என்று நல்லவள் வேஷம் போட்டு ஆனந்த் மனசை கலைக்கிறாள்.

அதன் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ஆனந்தை கூப்பிட்டு கார்த்திக்கை வேலையில் இருந்து அனுப்ப என்னிடம் ஒரு வழி இருப்பதாக சொல்லி எதையோ ஒன்றை சொல்ல ஆனந்த் நீ சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன் என்று கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்று ( ஏப்ரல் 29 ) அதாவது, கார்த்திக் தீபாவை அழைத்துக் கொண்டு வெளியே வர, ஒரு தள்ளுவண்டி கடையை பார்த்து, வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிடுகிறான். அதற்கு தீபா நீங்க, இந்த மாதிரி கடையிலெல்லாம் சாப்பிடுவீங்களா என்று கேட்க, நான் அடிக்கடி இந்தக் கடைக்கு வந்து இருக்கேன் என்று சொல்லி, தீபாவை அழைத்துச் செல்கிறான்.

கடைக்காரர் கார்த்திக்கை பார்த்ததும், வாங்க கார்த்திக் சார், என்ன சாப்பாடு என்று கேட்க, கார்த்திக் பேப்பர் ரோஸ்ட் என்று சொன்னான். இதையடுத்து கடைக்காரர் தீபாவை பார்த்து, இது யாரு புதுசா இருக்காங்க என்று கேட்கிறான்.

அதன் பிறகு கார்த்திக் இது தீபா, என்னுடைய மனைவி என அறிமுகம் செய்து வைக்கிறான். பிறகு தீபாவிடம் உங்களுக்கும் பேப்பர் ரோஸ்ட்டா என்று கேட்க, அவளும் ஆமாம் என்று சொல்கிறாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்