தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kanne Kalaimaane: சர்வதேச விருது பெற்ற கண்ணே கலைமானே!

Kanne Kalaimaane: சர்வதேச விருது பெற்ற கண்ணே கலைமானே!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 30, 2023 11:06 AM IST

கண்ணே கலைமானே திரைப்படம் சிறந்த படத்திற்கான 17 ஆவது அமெரிக்க சோகால் விருதை வென்றுள்ளது.

கண்ணே கலைமானே
கண்ணே கலைமானே

ட்ரெண்டிங் செய்திகள்

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தமன்னா ஆகிய நடித்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கண்ணே கலைமானே. இந்த திரைப்படம் தொடர்ந்து பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது.

இந்த திரைப்படம் பிரான்சில் 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியா பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டது. அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கும் கொடுக்கப்பட்டது.

தற்போது இந்த கண்ணே கலைமானே திரைப்படம் சிறந்த படத்துக்கான 17வது அமெரிக்க சோக்கால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது. அதோடு அமெரிக்காவில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிட தேர்வாக்கியுள்ளது.

இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி கூறுகையில், காலம் கடந்து சென்றாலும் நல்ல படைப்புகள் பேசப்படும். அந்த வகையில் கண்ணே கலைமானே திரைப்படம் தொடர்ந்து விருதுகளை பெற்று வருகிறது. இந்த படத்தில் உலக படத்துக்கான தன்மைகள் இருக்கின்ற காரணத்தினால் இது சோக்கால் விருதை வென்றுள்ளது.

அதேசமயம் அமெரிக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியுள்ளது. இது அனைவருக்கும் அதீத மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

திரைப்படங்களின் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தொடர்ச்சியாக சீனு ராமசாமி கூறி வருகிறார். நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அதற்கு எடுத்துக்காட்டாகும்.

அந்த வரிசையில் கண்ணே கலைமானே திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இயற்கையின் மீது அதீத காதல் கொண்ட ஒரே விவசாய இளைஞன் தனது மனைவியின் மீதும் அதே காதலை கொண்டிருக்கிறான் அதுவே இந்த திரைப்படத்தின் அடித்தளமாகும்.

வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்று இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து செயல்படுத்தக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தி இருப்பார்.

வங்கியில் பணிபுரியும் தமன்னாவோடு நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி திருமணத்தில் முடிகிறது. எல்லா சூழ்நிலைகளிலும் மனைவி தமன்னாவுக்கு உதயநிதி ஸ்டாலின் உறுதுணையாய் இருக்கின்றார்.

துளி கூட கவர்ச்சி இல்லாமல், சுயத்தின் மீது அதிக மதிப்பு கொண்ட பெண்ணாக இந்த கதாபாத்திரத்தில் தமன்னா கச்சிதமாக பொருந்தி இருப்பார். பாரதி என்ற பெயருக்கு ஏற்ப இந்த திரைப்படத்தில் தமன்னா நேர்த்தியாக நடித்திருப்பார்.

உதயநிதி ஸ்டாலினின் அப்பத்தாவாக நடிகை வடிவுக்கரசி அருமையாக பொருந்தி இருப்பார். கச்சிதமாக புரிந்து கதைக்களத்தை நகர்த்திச் சென்ற இந்த மூன்று பேருக்கும் விருது கிடைத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்