ரிஸ்க் காட்சிகளில் களமிறங்கிய ஜெமினி.. மாயாஜாலாத்தில் உச்சம்.. வரலாற்றுச் சித்திரம் கணவனே கண்கண்ட தெய்வம்
இந்த திரைப்படத்தில் ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் நடித்திருந்தார். அவர் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற திரைப்படங்களுக்கு அழிவே இல்லை. ஆண்டுகள் உருண்டோடினாலும் காலத்தால் அழியாத காவியமாக திகழ்கிறது 'கணவனே கண்கண்ட தெய்வம்'.

கணவனே கண்கண்ட தெய்வம்
திரையில் காதல் மன்னனாக ஜொலித்த ஜெமினி கணேசன் நிஜ வாழ்விலும் மூன்று திருமணங்கள் செய்து காதல் மன்னனாக திகழ்ந்தார். அவரது நடிப்பில் வெளிவந்த 'கணவனே கண்கண்ட தெய்வம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 69 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதாவது 1955 ஆம் ஆண்டு மே 6-ந் தேதி இதே நாளில் இந்தப் படம் ரிலீஸாகியது.
இதில், ஜெமினி கணேசனுடன் நாகையா, எம். என். நம்பியார், பிரெண்ட் ராமசாமி, நாட் அண்ணாஜிராவ், வி.பி.பலராமன், அஞ்சலி தேவி, லலிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் அஞ்சலி தேவிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. குறிப்பாக அக்காலத்து பெண்களை கண்ணீரில் கரைய வைத்த திரைப்படம். ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தில் பி.சுசீலா பாடிய அத்தனை பாடல்களும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.