தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Indian 2: சென்னை ஷெட்யூல் முடிவு - எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய அப்டேட்

Indian 2: சென்னை ஷெட்யூல் முடிவு - எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 04, 2023 11:39 AM IST

சென்னையில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படத்தின் ஷெட்யூல் முடிவுற்ற நிலையில் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் லாஸ் ஏஞ்சலிஸ் பறக்கவுள்ளனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர்
இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து கடந்த சில நாள்களாக சென்னையில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. இதைத்தொடர்ந்து கடைசி கட்ட ஷுட்டிங்குக்காக படக்குழுவினர் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸ்க்கு செல்லவுள்ளனர். இம்மாதம் கடைசியில் அங்கு சென்று 10 நாள்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளனராம். 

லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெறும் படப்பிடிப்புடன் படத்தின் மொத்த ஷுட்டிங்கும் முடிவடையும் என கூறப்படும் நிலையில், அடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மட்டும் மீதம் இருக்கும். அதையும் முடித்துவிட்டால் படத்தை இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாகவோ அல்லது அதற்கு முன்னரோ படத்தை ரிலீஸ் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு இடையே ராம் சரண் - கைரா அத்வானி நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் பணிகளிலும் இயக்குநர் ஷங்கர் ஈடுபட்டு வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் இந்த இரண்டு படங்களும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

ஷங்கர் - கமல் கூட்டணியில் ஹிட்டடித்தி இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்தியன் 2, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருப்பதுடன், அதில் தோன்றிய சேனாதிபதி கதாபாத்திரத்தில் இந்தப் படத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் இரண்டாம் பாகத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் என மிகப் பெரிய அளவில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தியன் 2 படத்தை இந்த ஆண்டிலேயே வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளிலும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்