Love to Divorce Actors: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!-actors who fell back in love after divorce and actor saif ali khan to naga chaitanya - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Love To Divorce Actors: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!

Love to Divorce Actors: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!

Marimuthu M HT Tamil
Aug 09, 2024 06:25 PM IST

Love After Divorce: சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் இந்தியாவில் ஏராளம். சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை பட்டியல் பெரிது.

Love After Divorce: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!
Love After Divorce: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!

உறவுகள் ஒரு இடத்தில் முடிந்தாலும், இன்னொரு இடத்தில் துளிர்க்கிறது. ஒரு துணையுடன் காதல் முறிந்தபிறகு, மீண்டும் அன்பைக் கண்டுபிடித்து நகர்வது ஒரு இயற்கையான செயல் ஆகும். ஒரு துணையுடன் காதலை இழந்து தவித்த சினிமா பிரபலங்கள் சிலர், காதலுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கி வாழ்க்கையில் ஜெயித்துள்ளனர். அவர்கள் குறித்துப் பார்ப்போம். 

நாக சைதன்யா:

7  ஆண்டு கால காதல் மற்றும் 4 வருட திருமண வாழ்வுக்குப் பின், நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா 2021-ல் பிரிவதாக அறிவித்தனர்.

அதன்பின், நாக சைதன்யா ’மேட் இன் ஹெவன்’ வலைத்தொடர் நடிகை சோபிதா துலிபாலாவுடன் மீண்டும் காதலில் விழுந்தார். அவர்கள் தங்கள் காதல் உறவை ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் பல சந்தர்ப்பங்களில் டேட்டிங்கில் ஈடுபட்டனர். இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா தனது மகன் நாகசைதன்யாவுக்கு நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக அறிவித்தார். விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளவுள்ளது.

ஹிருத்திக் ரோஷன்:

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் உள்துறை வடிவமைப்பாளர் சுசேன் கானிடமிருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தபோது அது அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. அவர்கள் 2014-ல் விவாகரத்து பெற்றனர். இதன்மூலம் தங்களின் 14 வருட திருமணத்தை முடித்தனர். ஆனால், தங்கள் பிள்ளைகளான ஹ்ரேஹான் மற்றும் ஹ்ரிதானுக்கு நல்ல நண்பர்களாகவும் இணை பெற்றோராகவும் உள்ளனர். இந்நிலையில் விவாகரத்துக்குப்பின் 2022ஆம் ஆண்டில், ஹிருத்திக் ரோஷன், சபா ஆசாத்துடன் கைகோர்த்து ஒரு கஃபேயில் இருந்து வெளியேறுவதைக் காண முடிந்தது. இருவரும் தற்போது காதலித்து வருவதாக சமூக வலைதள ஊடகமான பி.டி.ஏ தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் அர்ஸ்லான் கோனியிடம் சுசேன் மீண்டும் காதலைக் கண்டுள்ளார்.

மலைக்கா அரோரா:

திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்-நடிகர் அர்பாஸ் கான் ஆகியோர் திருமணப் பந்தத்தில் இருந்து, பிரிந்து செல்வதாக அறிவித்தனர். 

2016ஆம் ஆண்டில், மலைக்கா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூருடன் மீண்டும் காதல் கொண்டார். ஆனால் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது பிரிந்துள்ளது. இதற்கிடையில், அர்பாஸ் இப்போது ஒப்பனைக் கலைஞர் ஷுரா கானை மணந்துள்ளார். இவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது.

சைஃப் அலி கான்:

பாலிவுட்டின் மிகவும் விரும்பப்பட்ட ஜோடிகளில் ஒருவராக சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் கான் ஜோடி உள்ளது. 2007ஆம் ஆண்டில் தங்கள் தஷானி படத்தின் செட்டில் இருவரும் காதலை உணர்ந்தனர். 5 ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு, 2012ஆம் ஆண்டில், இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இப்போது மகன்கள் தைமூர் அலி கான் மற்றும் ஜஹாங்கீர் அலி கான் ஆகியோருக்கு பெருமைமிக்க பெற்றோராக இருவரும் உள்ளனர். ஆனால்,கரீனா கபூருடன் மீண்டும் காதலில் விழுவதற்கு முன், சைஃப் அலி கான், முன்னாள் நடிகை அம்ரிதா சிங்கை திருமணம் செய்து 13 ஆண்டுகளாக வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு நடிகை சாரா அலி கான் மற்றும் இப்ராஹிம் அலி கான் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அமீர்கான்:

16 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு அமீர்கான் தனது மனைவி ரீனா தத்தாவிடமிருந்து விவாகரத்துக்கோரி விண்ணப்பித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பாலிவுட்டின் சிறந்த திரைப்பட இயக்குநர் கிரண் ராவை மணந்தார். அவர்கள் லகான் (2001) இல் ஒன்றாக வேலை செய்தனர். அங்கு தான் அவர்களின் காதல் கதை தொடங்கியது. 2011ஆம் ஆண்டில் அவர்கள் தங்கள் மகன் ஆசாத் ராவ் கானை உலகிற்கு வரவேற்றனர். 2021ஆம் ஆண்டில், கிரண் மற்றும் அமீர் தங்கள் பிரிவை அறிவித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து நல்ல நண்பர்கள், இணை பெற்றோர்களாக உள்ளனர்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.