Naga Chaitanya: சமந்தாவை கழட்டிவிட்டு இரண்டாவது திருமணத்திற்கு ரெடி.. நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம்?-rumours spreading naga chaitanya and sobhita dhulipala are getting engaged - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naga Chaitanya: சமந்தாவை கழட்டிவிட்டு இரண்டாவது திருமணத்திற்கு ரெடி.. நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம்?

Naga Chaitanya: சமந்தாவை கழட்டிவிட்டு இரண்டாவது திருமணத்திற்கு ரெடி.. நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம்?

Aarthi Balaji HT Tamil
Aug 08, 2024 09:04 AM IST

Naga Chaitanya: நாக சைதன்யாவுக்கும், சோபிதா துளிபாலாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.

 சமந்தாவை கழட்டிவிட்டு இரண்டாவது திருமணத்திற்கு ரெடி.. நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம்
சமந்தாவை கழட்டிவிட்டு இரண்டாவது திருமணத்திற்கு ரெடி.. நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம்

இருவரும் தீவிரமாக காதலிப்பதாக பெரும் பேச்சுகள் அடிப்பட்டு வந்தது. ஆனால் நாக சைதன்யாவும், ஷோபிதாவும் இந்த வதந்திகளை தெளிவாக மறுக்கவில்லை.

நாக சைதன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்

எப்போது ஊடகங்கங்களை சேர்ந்தவர்கள் இதை பற்றி கேட்டாலும் பதிலளிக்க மறுத்துவிட்டனர். இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வலுவான தகவல்கள் உள்ளன.

நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக்கப் போகிறார்கள் என்று சினிமா ஊடகங்கள் பக்கத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

நிச்சயதார்த்தம் எப்போது?

நாக சைதன்யாவுக்கும், சோபிதா துளிபாலாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. இந்த தனிப்பட்ட நிகழ்ச்சி நாக சைதன்யாவின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாம். இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள போவதாக சொல்லப்படுகிறது.

நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு நாகார்ஜுனாவே இதை அறிவிக்கப் போவதாகத் தெரிகிறது. அதன் பிறகு, நாக சைதன்யாவும் மற்றும் ஷோபிதாவும் சமூக ஊடகங்களில் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.

சமந்தாவுடன் விவாகரத்து

நாக சைதன்யா 2017 ஆம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடங்கள் நீடித்த இந்த உறவு 2021 ஆம் ஆண்டு முறிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். அதன் பிறகு சில காலம் தனியாக இருந்தார் நாக சைதன்யா. 

சோபிதா துலிபாலாவுடன் எப்படி பழக்கம்

சோபிதா துலிபாலாவும், நாக சைதன்யாவும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. ஆனால் இருவரும் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தனர்.

அதன் பிறகு இருவரும் மும்பையில் உள்ள ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதேபோல் இருவரும் ஒன்றாக ஐரோப்பா சுற்றுலா சென்றதாகவும் பரவியது. இருவரும் உணவகத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

இதை கேட்ட சமந்தா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நாக சைதன்யா செய்வது சற்றும் சரியில்லாத விஷயம், சமந்தாவை கொஞ்சம் கூட அவர் நினைத்து பார்க்கவே இல்லையா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

மறுபக்கம் ஒரு தரப்பினர், சமந்தா, நாக சைதன்யா பிரிந்துவிட்டார்கள். அதனால் அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம். அதை யாரும் கேட்க கூடாது ” என்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக சோபிதா துலிபாலா, நாக சைதன்யா நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.