Samantha: சைத்தன்யாவை விட்டு சமந்தா போனாலும் சந்தோஷம் தான்... உடைத்து பேசும் நாகார்ஜூனா?-nagarjuna says about samntha nagachaitanya divorce - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: சைத்தன்யாவை விட்டு சமந்தா போனாலும் சந்தோஷம் தான்... உடைத்து பேசும் நாகார்ஜூனா?

Samantha: சைத்தன்யாவை விட்டு சமந்தா போனாலும் சந்தோஷம் தான்... உடைத்து பேசும் நாகார்ஜூனா?

Malavica Natarajan HT Tamil
Sep 20, 2024 03:20 PM IST

Samantha: நாகசைத்தன்யாவை விட்டு சமந்தா சென்றாலும் தற்போது எங்கள் குடும்பம் சந்தோஷமாக இருப்பதாக நடிகரும் நாகசைத்தன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா கூறியுள்ளார்.

Samantha: சைத்தன்யாவை விட்டு சமந்தா போனாலும் சந்தோஷம் தான்... உடைத்து பேசும் நாகார்ஜூனா?
Samantha: சைத்தன்யாவை விட்டு சமந்தா போனாலும் சந்தோஷம் தான்... உடைத்து பேசும் நாகார்ஜூனா?

ரசிகர்களின் விருப்ப ஜோடி

இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக இருவரும் வலம் வந்தனர். இவர்களின் திருமணத்திற்கு பின்னும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். சொல்லப்போனால், திருமணத்திற்குப் பின் சமந்தாவின் பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்தன. இதனால், அவர் டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் மாஸ் ஹீரோயினாக வலம் வந்தார்.

விவாகரத்து

இந்நிலையில், சமந்தா சினிமாவிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அவர் குடும்ப வாழ்க்கைக்கு முழுவதுமாக செல்ல உள்ளார் என வதந்திகள் பரவி வந்த நிலையில், சமந்தா- நாகசைத்தன்யா ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஷாக்கை அளித்தனர். இதனால், இவர்கள் இருவர் குறித்து அதிகப்படியான செய்திகள் பரவத் தொடங்கின.

நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா

காதல் கணவரை பிரிந்தாலும், சமந்தா தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் அவர் மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக சில காலம் சினிமாவிலிருந்து விலகி ஓய்விலிருந்தார். தற்போது நோயிலிருந்து மீண்டு பூரண குணமடைந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

நாகசைத்தன்யாவின் அடுத்த காதல்

காதல் திருமணத்தின் முறிவு, உடல் நிலை பாதிப்பு என அடுத்தடுத்து துவண்டு போன சமந்தாவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு அளித்து வந்தனர். மேலும், சோசியல் மீடியாக்களில் இவர்கள் இருவரும் நடித்த படங்கள், நேர்காணல்கள், புகைப்படங்களை அதிகளவு பகிர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். 

இதற்கிடையில், நடிகர் நாகசைத்தன்யா பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமான நடிகை சோபிதாவை காதலிப்பதாக கூறி அவர்கள் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இச்சம்பவத்திற்குப் பின், தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மீண்டும் இவர்களது காதல் கதையை சோசியல் மீடியாவில் பதிவிட்டு ட்ரெண்டு செய்து வந்தனர்.

நாகார்ஜூனா ஓபன் டாக்

இந்த சமயத்தில், நடிகர் நாகார்ஜூனா அளித்த பேட்டி தற்போது வைரலாகிறது. அதில், நாகசைதன்யா- சமந்தாவின் விவாகரத்து எங்கள் குடும்பத்தை நிலை குலையச் செய்தது. இதிலிருந்து அவ்வளவு எளிதில் எங்களால் வெளியில் வர முடியவில்லை. நாகசைத்தன்யா வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலியை அனுபவித்தார். இருப்பினும், அவர் அந்த உணர்வுகளை பிறரிடம் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பது எங்களுக்கு கண்கூடாக தெரிந்தது.

ஆனால், இப்போது சைத்தன்யா அவரின் மகிழ்ச்சியை கண்டுபிடித்துவிட்டார். இதனால், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.