Naga Chaitanya: பெண்ணால் வர போகும் பிரச்னை.. நாக சைதன்யா - ஷோபிதா திருமண வாழ்க்கை குறித்து ஜோதிடர் கணிப்பு
Naga Chaitanya: நாக சைதன்யாவும், சோபிதா துளிபாலவும் திருமண வாழ்க்கையில் மூன்று வருடங்கள் கழித்து சண்டை போடுவார்கள் என்று பிரபல ஜோதிடர் வேணு சுவாமி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

பெண்ணால் வர போகும் பிரச்னை.. நாக சைதன்யா - ஷோபிதா திருமண வாழ்க்கை குறித்து ஜோதிடர் கணிப்பு
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் திரையுலகில் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரோலிங் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜாதகத்தை வழங்கிய பிரபல ஜோதிடர் வேணு சுவாமி தற்போது நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா குறித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்கள் கழித்து சைதுவுக்கும், சோபிதாவுக்கும் ஒரு பெண்ணால் பிரச்சனைகளும், சண்டைகளும் வரும். இவர்களது நிச்சயதார்த்தம் மற்றும் பிறந்த நட்சத்திரத்தின் விவரங்களைப் பார்த்தால், அவர்களால் ஒன்றாக இருக்க முடியாது, நிச்சயமாக பிரிந்து விடுவார்கள் என்று ஜோதிடர் வேணு சுவாமி கடுமையாக கூறினார்.
