தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Leo:பான் இந்தியா இல்ல.. பான் வேர்ல்டு..ஓநாயுடன் மோதும் விஜய்? ஆக்‌ஷன் காட்சிக்கு மட்டும் 10 கோடி! - அதிரும் லியோ!

Vijay Leo:பான் இந்தியா இல்ல.. பான் வேர்ல்டு..ஓநாயுடன் மோதும் விஜய்? ஆக்‌ஷன் காட்சிக்கு மட்டும் 10 கோடி! - அதிரும் லியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 23, 2023 11:32 AM IST

இந்தியாவைத்தாண்டி விஜயை ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சியாம்.

For the Hyena action episode in vijay lokesh kanagaraj Leo the producers have spent a whopping 10cr
For the Hyena action episode in vijay lokesh kanagaraj Leo the producers have spent a whopping 10cr

ட்ரெண்டிங் செய்திகள்

குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆக்ரோஷமாக நின்ற விஜயின் பின்னால் நின்ற ஓநாய் நின்று கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. முன்னதாக இந்தப்படத்தில் விஜயுடன் சிங்கம் ஒன்று நடிப்பதாகவும், அதன் கிராஃபிக்ஸ் பணிகளுக்காக பெருந்தொகை செலவழிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது லியோ படத்தில் இருந்து ஒரு எக்ஸ்க்ளூசிவான தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் ஓநாய் சம்பந்தமான ஆக்‌ஷன் எபிசோடு ஒன்று படத்தில் இருக்கிறதாம். அந்த ஒரு காட்சிக்காக தயாரிப்பாளர் 10 கோடி செலவிட்டு இருக்கிறாராம். ஒரு தமிழ் படத்தில் விலங்கை வைத்து நடக்கும் ஆக்‌ஷன் காட்சிக்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டது இதுதான் முதன் முறையாம் இந்தியாவைத்தாண்டி விஜயை ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சியாம்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இந்தப்படத்தில் இணைந்திருக்கிறது.

இவர்களுடன் இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், நடிகர் அர்ஜூன், நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு முன்னதாக விஜயின் ‘பீஸ்ட்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்ததாகவும் கூறப்பட்டது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்