தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Shamlee: அஜித் மனைவி ஷாலினி தங்கை ஷாம்லியின் ஓவியக்கண்காட்சி.. நீங்க போய் பாக்கணுமா? - விலாசம் இங்கே!

Actress Shamlee: அஜித் மனைவி ஷாலினி தங்கை ஷாம்லியின் ஓவியக்கண்காட்சி.. நீங்க போய் பாக்கணுமா? - விலாசம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 24, 2023 12:36 PM IST

இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை ஷாம்லியின்கலை நிகழ்ச்சியான ’SHE’-யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Filmmaker Mani Ratnam and Music Director A R Rahman visit Actress Shamlee solo art show SHE
Filmmaker Mani Ratnam and Music Director A R Rahman visit Actress Shamlee solo art show SHE

ட்ரெண்டிங் செய்திகள்

ஓவியத்துடன் நடிகை ஷாம்லி!
ஓவியத்துடன் நடிகை ஷாம்லி!

வெண்பா கேலரியின் கிராஸ் ரோட்ஸ், சதர்ன் டிரெண்ட்ஸின் சித்ர கலா பரிஷத், உலக வர்த்தக மையமான துபாயில் பெங்களூரு இண்டர்நேஷனல் செண்டர் சதர்ன் டிரெண்ட்ஸ் வேர்ல்ட் ஆர்ட் துபாய் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது அவர் சென்னையில் ’She' என்ற தலைப்பில் அவரது மற்றொரு அற்புதமான கலைப்படைப்பைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியத் திரைப்படத் துறையின் பெருமையாக கருதப்படும் இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ஷாம்லியின் படைப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மணிரத்னம்
மணிரத்னம்

விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பு மற்றும் சிங்கப்பூரில் உள்ள லசால் கலைக் கல்லூரியில் விஷுவல் ஆர்ட்ஸில் டிப்ளமோ பட்டம் பெற்ற ஷாம்லி, கலைத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 6 ஆண்டுகளில் அவரது வழிகாட்டியான ஆர்டிஸ்ட் திரு. ஏ.வி. இளங்கோவிடமிருந்து முறையான வழிகாட்டுதலையும் பயிற்சியையும் பெற்று தனது திறமைகளை மேம்படுத்தியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

ஷாம்லி பாரீஸ் கலைக் கல்லூரியில் ஆக்கப்பூர்வமான பயிற்சியையும், சிங்கப்பூரில் சீன இங்க் (Chinese ink), புளோரன்ஸ் அகாடமியா ரியாசியில் கண்ணாடி ஓவியம் வரைவதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்:

சென்னை, ஆழ்வார்பேட்டை, அஸ்வினி மருத்துவமனைக்கு அடுத்துள்ள கஸ்தூரி எஸ்டேட் 2வது தெருவில், ஃபோகஸ் ஆர்ட் கேலரி, எண்.11ல், ‘SHE’ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 30, 2023 வரை நிகழ்ச்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி இவை இருக்கும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்