Sonu Sood:ஒரு ஏக்கர் நிலம் .. 2500 கிலோ அரிசி.. மிரளவைத்த சோனு சூட் ரசிகர்கள்!
தமிழ், ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சோனு சூட் தற்போது ஃபதே படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா முதல் அலையின் போது புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தல், உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஆக்சிஜன் உட்பட பல உதவிகளை செய்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்!
தமிழில் ‘மஜ்னு’ ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ ‘ஒஸ்தி’ உள்ளிட்ட பல படங்களில் இவர் வில்லனாக நடித்திருந்தாலும், இவர் அதிகமாக பிரபலமானது அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படத்தில் வில்லனாக நடித்ததின் மூலமாகத்தான். அகோரியாக அந்தபடத்தில் மிரட்டியிருப்பார் சோனு.
தமிழ், ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சோனு சூட் தற்போது ஃபதே படத்தில் நடித்து வருகிறார். படங்களின் மூலம் கிடைத்த பிரபலத்தை விட, தான் செய்யக்கூடிய உதவிகள் மூலமாக கிடைக்கும் பிரபலமே அவரை இன்று கடைக்கோடி சாமானியன் வரை கொண்டு சேர்த்து இருக்கிறது.
இப்போதும் நூற்றுக்கணக்கான பேர் உதவிகள் கேட்டு அவரைத் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தன்னை நாடி உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்ய, தன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து அவர்களுக்கு உதவி வருகிறார் சோனு. இதுமட்டுமல்லாமல் சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு தனி பயிற்சி மையமும் வைத்துக்கொடுத்தும் உதவுகிறார்.
இப்படி மக்கள் மத்தியில் உதவும் கடவுளாய் வலம் வரும் சோனு சூட்டை போற்றும் விதமாக மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ்- ல்ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோ அரிசியை கொண்டு சோனு சூட் உருவத்தை அவரது ரசிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வரைந்துள்ளனர். இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சோனு சூட், “ . “2,500 கிலோ.. ஒரு ஏக்கர் நிலம் எல்லையில்லா அன்பு” என்று பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் அனைத்து அரிசியும் நன்கொடையாக கொடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

டாபிக்ஸ்