Vikram Movie Updates: ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’-சியான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர்!
Veera Theera Sooran: வீர தீர சூரன் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, பிரசன்னா படத்தொகுப்பு செய்கின்றனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் நடிகர் விக்ரம் மாறுபட்ட பாத்திரத்தில் உள்ளார்

பிரபல மலையாள நடிகர் சித்திக் இப்போது விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துவரும் வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். எச்.ஆர் பிக்சர்ஸ் மற்றும் சித்திக் இருவருமே இந்தப் ப்ராஜெக்டில் நடிக்கும் செய்தியை அறிவித்தனர், அவர் ஒரு தீவிரமான போஸுடம் இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்து கொண்டார். சித்திக் மற்றும் விக்ரம் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
சித்திக், மலையாள சினிமாவில் தனது நடிப்புத் திறமைக்காக அதிகம் அறியப்பட்டாலும், சித்திக் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு சுபாஷ் படத்தில் அர்ஜுன் மற்றும் ரேவதி நடிப்பில் வந்த படத்தில் ராஜசேகர் என்ற பெயரில் தமிழில் அறிமுகமானார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகியவை தமிழ் சினிமாவில் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.
வீர தீர சூரன் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, பிரசன்னா படத்தொகுப்பு செய்கின்றனர். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
நடிகர் சியான் விக்ரம் தனது பிறந்தநாளை ஏப்ரல் 17 அன்று விமர்சியாக கொண்டாடினார். இதை முன்னிட்டு அவர் நடிக்க உள்ள, ' வீர தீர சூரன் ' என்ற புதிய படத்தை அறிவித்து உள்ளார்.
எஸ். யு. அருண் குமார் இயக்கி இருக்கும் ' வீர தீர சூரன் ' படத்தை எச். ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்க, ஜி. வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
படத்தில் சியான் விக்ரமின் கிராமிய தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு டீஸரும் வெளியிடப்பட்டது. அவர் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்க உள்ளார். ' வீர தீர சூரன் ' படம் ஒரு அதிரடிப்படம் என்று கூறப்படுகிறது.
சியான் 62 ' வீர தீர சூரன்'
சியான் 62 படத்தின் புதிய தலைப்பு டீஸருடன், ' வீர தீர சூரன் ' தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டனர், அதில் சியான் விக்ரம் தனது ஒவ்வொரு கைகளிலும் இரண்டு நீண்ட அரிவாளை வைத்து இருக்கிறார். இந்த போஸ்டரை நடிகர் சியான் விக்ரம், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் " நீங்கள் ஒரு கேங்ஸ்டாவாக இருந்தால்.. நான் ஒரு மான்ஸ்டா. !! "என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கலான்
விக்ரம் தங்கலான் என்ற படத்திலும் நடித்துள்ளார். பா. பஞ்சித் இயக்கி உள்ள இந்த படம் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயல்களின் (கே.ஜி.எஃப்) பின்னணியில் உள்ள 'உண்மைக் கதையை' வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர்களால் பகிரப்பட்ட ஒரு குறிப்பில், இந்தியாவை ஆங்கிலேயர்களால் 'சோனே கி சிடியா' ( தங்கப் பறவை ) என்று அழைத்ததற்கான காரணத்தை படம் வெளிப்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
தங்கலான் நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது மற்றும் கே.ஜி.எஃப் மக்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுரங்கங்களை எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை ஆராயும். 19 ஆம் நூற்றாண்டில் சுதந்திரத்திற்கு முந்தைய படத்தின் மூலம் குடியிருப்பாளர்கள் காலனித்துவவாதிகளின் சுரண்டலைத் தவிர்ப்பதற்கான வழிகளை எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பதையும் படம் ஆராய்கிறது.

டாபிக்ஸ்